அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeசெவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்கள், முக்கோண வடிவில், இன்றும், நாளையும் வானில் தோன்ற போகின்றன. இந்த அற்புத காட்சியை வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். 


சூரிய குடும்பத்தை சேர்ந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. பூமியிலிருந்து வெகு தொலைவில் சுற்றி வரும் இந்த கிரகங்களை வெறும் கண்ணால் காண்பது அரிது. ஆனால், ஒரு சில நேரங்களில் இந்த கிரகங்கள் பூமிக்கு அருகில் வரும் போது பார்த்து ரசிக்கலாம். இந்த வகையில், செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களையும் இன்றும், நாளையும் வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 


வெள்ளி கிரகத்தின் வலதுபுறத்தில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வானத்தில் தோன்றவுள்ளன. இந்த மூன்று கிரகங்களும் பார்ப்பதற்கு ஒரு முக்கோணம் வடிவில் காட்சியளிக்கும். ஒரு வார காலத்தில், படிப்படியாக முக்கோண தோற்றம் மாறும். 


இந்த மூன்று கிரகங்களையும் மாலை நேரத்தில் இருட்டுவதற்கு முன் பார்க்கலாம். இன்று மாலையில் வெள்ளியும், அதன் கீழ் பிறை நிலவும் தெரியும். நாளை வெள்ளி கிரகத்தின் இடப்புறமாக நிலவு தெரியும். வெள்ளி கிரகம் சற்று பிரகாசமாகவும், அதன் அருகே சனி மற்றும் செவ்வாய் சற்று மங்கலாகவும் தெரியும்.

இந்த நிகழ்வு குறித்து, ஸ்கை அண்டு டெலஸ்கோப் இதழின் மூத்த ஆசிரியர் ஆலன் மெக்ராபர்ட் கூறுகையில், "இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது. அதில் பல அதிசயங்கள் அவ்வப் போது நிகழ்கின்றன. அவற்றில் ஒன்றாக செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் வெறும் கண்ணால் காணும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி, கிரகங்களை பார்த்து மகிழுங்கள்' என்றார்

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.