
கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பெயர் போனவர்கள் பாகிஸ்தான் வீரர்கள். தற்போது அவர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இங்கிலாந்தில் அதிகமாக விற்பனையாகும் "நியூஸ் ஆப் வேல்டு'' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் லார்ட்ஸ் டெஸ்டில் பந்துகளை நோபால், வைடுகளாக வீசுமாறு அந்நாட்டைச் சேர்ந்த சூதாட்டகாரர் மசார் மஜித் கூறி இருக்கிறார்.இதற்காக அவர்களுக்கு ரூ.1.15கோடி பணம் கொடுத்து இருக்கிறார்.
இது ஸ்பாட் பிக்சிங் ஆகும். இதற்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான்பட் தான் மூலக்காரணமாக இருந்தார். அதோடு கமரன் அக்மலுக்கும் தொடர்பு உண்டு.இது தொடர்பாக சூதாட்ட தரகர் மசார் மஜித்தை இங்கிலாந்து போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஸ்பார்ட் பிக்சிங் குற்றச்சாட்டு காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் 7 பேரிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது ஆசிப், முகமது அமீர், விக்கெட் கீப்பர் கமரன் அக்மல் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை பாகிஸ்தான் மானேஜர் யாசர் சயித் ஒப்புக்கொண்டார். வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்து அவர்களிடம் ஸ்காட்லாந்து யார்டு வாக்கு மூலம் வாங்கி சென்றனர்.
இந்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்நாட்டு வீரர் கனேரியா கவுண்டி போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டாலும் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையேயான லார்ட்ஸ் டெஸ்டின் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது. ஐ.சி.சி. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தற்போது இந்த பிரச்சினை போலீஸ் விசாரணையில் உள்ளது. நாங்களோ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ எதுவும் கூற இயலாது. இது தொடர்பாக எந்த வீரரும் கைது ஆகவில்லை. இதனால் போட்டி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment