அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

இந்தியாவின் முதல் வெற்றி

Kumar Sangakkara congratulates Virender Sehwag

முத்தரப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.சேவக் 99 ரன்கள் குவிக்க, நேற்றைய லீக் போட்டியில், இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இத்தொடரின் 3 வது போட்டி, நேற்று தம்புல ரங்கிரி மைதானத்தில் நடந்தது. இந்தியா, இலங்கை அணிகள் மோதின. "டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங் தேர்வு செய்தார்.


 இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் காரணமாக யுவராஜ், மிதுன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதில், விராட் கோஹ்லி, இஷாந்த் சர்மா தேர்வு பெற்றனர். இதே போல இலங்கை அணியில் மெண்டிஸ், ஹெராத்துக்குப் பதில், ரந்திவ், பெர்னாண்டோ வாய்ப்பு பெற்றனர். 
வேகம் அசத்தல்:
இலங்கை அணிக்கு தரங்கா, தில்ஷன் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை வீசிய பிரவீண் குமார், முதல் பந்திலேயே தரங்காவை டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா (2) நெஹ்ராவிடம் வீழ்ந்தார். அனுபவ வீரர் ஜெயவர்தனாவும் வெறும் 4 ரன்களுக்கு அவுட்டாக, இலங்கை அணியின் "டாப்-ஆர்டர்' நிலைகுலைந்தது. 

தில்ஷன் ஆறுதல்:
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் துவக்க வீரர் தில்ஷன், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிடில் ஆர்டரில் சமரவீரா (7), மாத்யூஸ் (15), கபுகேதரா (10) ரன் சேர்க்க தவறினர். 45 ரன்கள் சேர்த்த தில்ஷன், ஓஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் சுமார் 20 நிமிடம் தடைபட்டது. 

ரந்திவ் மிரட்டல்: 
பின்னர் களமிறங்கிய ரந்திவ், இந்திய பந்து வீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்த்தார். இவருக்கு குலசேகரா (22) நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்க்க, இலங்கை அணி 150 ரன்களை கடந்தது. ரந்திவ் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்க்க, 46.1 ஓவரில் "ஆல்-அவுட்டான' இலங்கை அணி, 170 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஓஜா 3, பிரவீண், இஷாந்த், ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

நிதான துவக்கம்: 
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக், தினேஷ் கார்த்திக் ஜோடி நிதான துவக்கம் தந்தது. இலங்கை பந்து வீச்சில் மிரட்ட, இந்திய அணி ரன் சேர்க்க திணறியது. தினேஷ் கார்த்திக் 10 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

சேவக் அதிரடி: 
அடுத்து களமிறங்கிய விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோர் டக்-அவுட்டாகி சொதப்பினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த ரெய்னா 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் சேவக்குடன் தோனி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது. முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவக், பின்னர் வழக்கம் போல அதிரடிக்கு மாறினார். இவர் 99 ரன்கள் (11 பவுண்டரி, 2 சிக்சர்) குவிக்க, 34.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சேவக் (99), தோனி (23) அவுட்டாகாமல் இருந்தனர். 

"போனஸ்' புள்ளி: 
இவ்வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்தது. தவிர, 34.3 ஓவர்களில் இலக்கை எட்டியதன் மூலம் "போனசாக' 1 புள்ளி கிடைத்தது. தற்போது இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்றுள்ளன. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் உள்ளது. 

சதத்தை பறித்த ரந்திவ்
நேற்றைய போட்டியில், இந்திய வீரர் சேவக்கின் (99) சதம் அடிக்கும் வாய்ப்பை, வேண்டும் என்றே தட்டிப் பறித்தார் இலங்கை பவுலர் சூரஜ் ரந்திவ். இந்திய அணி 170 ரன்களை எட்டிய போது, வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. அதே சமயம் சேவக் சதமடிக்க 1 ரன் தேவைப்பட்டது. இந்நிலையில் பந்து வீசிய இலங்கை சுழற் பந்து வீச்சாளர் சூரஜ் ரந்திவ், வேண்டுமென்றே "நோபால்' வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சேவக் சிக்சர் விளாசினார். ஆனால் "நோபால்' என்பதால், சேவக்கின் சிக்சர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. ரந்திவின் சூழ்ச்சியால் சேவக்கின் சதம் அடிக்கும் வாய்ப்பு வீணாகப் பறிபோனது. 

புள்ளிப்பட்டியல்
முத்தரப்பு தொடரின் முதல் சுற்று முடிந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளன. "ரன்-ரேட்' அடிப்படையில் ஒவ்வொரு அணியின் நிலை வருமாறு.


அணி    போட்டி    வெற்றி    தோல்வி    புள்ளி    ரன்-ரேட்
நியூசிலாந்து    2    1    1    5    +1.684


இந்தியா    2    1    1    5    -1.515


இலங்கை    2    1    1    4    ----0.278


ஸ்கோர் போர்டு
இலங்கை
தரங்கா (ப) பிரவீண்    0 (1)
தில்ஷன் (கே) ரோகித் (ப) ஓஜா    45 (62)
சங்ககரா (கே) ஓஜா (ப) நெஹ்ரா    2 (12)
ஜெயவர்தனா எல்.பி.டபிள்யு., (ப) பிரவீண்    4 (11)
சமரவீரா (கே) ஜடேஜா (ப) இஷாந்த்    7 (23)
மாத்யூஸ் எல்.பி.டபிள்யு., (ப) ஜடேஜா    15 (26)
கபுகேதரா (ப) ஜடேஜா    10 (28)
ரந்திவ் (கே) ரெய்னா (ப) ஓஜா    43 (61)
குலசேகரா (கே) தோனி (ப) இஷாந்த்    22 (30)
மலிங்கா (ஸ்டம்) தோனி (ப) ஓஜா    5 (12)
பெர்னாண்டோ -அவுட் இல்லை-    6 (11)
உதிரிகள்    11
மொத்தம் (46.1 ஓவரில் "ஆல்-அவுட்')    170
விக்கெட் வீழ்ச்சி: 1-0 (தரங்கா), 2-14 (சங்ககரா), 3-23 (ஜெயவர்தனா), 4-44 (சமரவீரா), 5-82 (தில்ஷன்), 6-83 (மாத்யூஸ்), 7-103 (கபுகேதரா), 8-142 (குலசேகரா), 9-158 (மலிங்கா), 10-170 (ரந்திவ்). 
பந்து வீச்சு: பிரவீண் 8-2-20-2, நெஹ்ரா 9-0-39-1, இஷாந்த் 9-1-32-2, ஓஜா 9.1-0-36-3, ஜடேஜா 10-2-34-2, சேவக் 1-0-5-0. 

இந்தியா
கார்த்திக் (கே) குலசேகரா (ப) மாத்யூஸ்    10 (35)
சேவக் --அவுட் இல்லை-    99 (100)
கோஹ்லி (கே) சங்ககரா (ப) பெர்னாண்டோ    0 (3)
ரோகித் எல்.பி.டபிள்யு., (ப) மாத்யூஸ்    0 (2)
ரெய்னா (கே) தரங்கா (ப) பெர்னாண்டோ    21 (35)
தோனி -அவுட் இல்லை-    23 (38)
உதிரிகள்    18
மொத்தம் (34.3 ஓவரில் 4 விக்., இழப்பு)    171
விக்கெட் வீழ்ச்சி: 1-30 (தினேஷ் கார்த்திக்), 2-31 (விராத் கோஹ்லி), 3-32 (ரோகித்), 4-91 (ரெய்னா). 
பந்து வீச்சு: மலிங்கா 7-0-34-0, குலசேகரா 5-0-23-0, மாத்யூஸ் 7-1-32-2, பெர்னாண்டோ 8-0-33-2, ரந்திவ் 7.3-0-38-0Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.