
வோடபோன் நிறுவனம், சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும், மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
VF 247 என அழைக்கப்படும் இந்த போன், கிராமங்களில் வாழும் மக்களுக்கு, எப்போதாவது ஒருமுறை மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த போனை சார்ஜ் செய்வதற்கு மின் இணைப்பே தேவையில்லை.
ஏற்கனவே, ஓர் ஆண்டுக்கு முன் சாம்சங் நிறுவனம், இதே போன்றதொரு மொபைல் போனை Guru 1107 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. வோடபோன் தரும் இந்த போனை நல்ல ஒளியில் வைத்திருந்தாலே போதும். தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது. Sun Boostஎன்ற பெயரில் போனின் உள்ளே உள்ள ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இந்த பணியினை மேற்கொள்கிறது.
சாதாரண அறை ஒளி இருந்தாலே போதும். சூரிய ஒளிக்கு நேராகத்தான் வைத்து சார்ஜ் செய்திட வேண்டியது என்பது இல்லை. முழுமையாக சார்ஜ் செய்திட, சூரிய ஒளியில் 8 மணி நேரம் வைத்திருந்தால் போதும். இது எட்டு நாளைக்கு போனில் இருக்கும். நான்கு மணி நேரம் பேசும் சக்தியை அளிக்கும்.
இந்த போனில், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ, வண்ணத்திரை ஆகியவையும் உள்ளன. இந்த போன் அடுத்த மாதம் கடைகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.1,500 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment