அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சேவக் அதிரடி - பைனலில் இந்தியா

Virender Sehwag brings up his 13th ODI ton

முத்தரப்பு தொடரின் முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பைனலுக்கு ஜோராக முன்னேறியது. வெறும் 118 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, தொடரில் இருந்து வெளியேறியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

முனாப் வாய்ப்பு:இந்திய அணியில் பிரக்யான் ஓஜா, ரோகித் சர்மா நீக்கப்பட்டு, முனாப் படேல், விராத் கோஹ்லி வாய்ப்பு பெற்றனர். காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் நீக்கப்பட்டார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மில்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் தினேஷ் கார்த்திக் "டக்-அவுட்' ஆனார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (8), சவுத்தி வேகத்தில் நடையை கட்டினார். யுவராஜ் (6) ஏமாற்றினார். சவுத்தி வேகத்தில் ரெய்னா (1) பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.

சேவக் அதிரடி:பின் சேவக்-தோனி இணைந்து அணியை மீட்டனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய சேவக் பவுண்டரி மழை பொழிந்தார். நியூசிலாந்து பவுலர்களை ஒரு கை பார்த்த இவர், ஒருநாள் போட்டிகளில் 13வது சதமடித்து அசத்தினார். இவர் 93 பந்தில் ஒரு சிக்சர், 16 பவுண்டரி உட்பட 110 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் மெக்கலம் சுழலில் வெளியேறினார்.

நிதானமாக ஆடிய தோனி (38), மெக்கலம் சுழலில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா (17), பிரவீண் குமார் (6), ஆஷிஸ் நெஹ்ரா (0), முனாப் படேல் (7) வந்த வேகத்தில் வெளியேறினர். இந்திய அணி 46.3 ஓவரில் 223 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. இஷாந்த் சர்மா (8) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4, நாதன் மெக்கலம் 3, மில்ஸ் 2, ஆன்டி மெக்கே ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பிரவீண் துல்லியம்:சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. இந்திய வேகங்கள் போட்டுத் தாக்க, விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. பிரவீண் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மார்டின் கப்டில் "டக்-அவுட்' ஆனார். மற்றொரு துவக்க வீரர் வாட்லிங் (2) நெஹ்ரா வேகத்தில் போல்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஸ் டெய்லர் (8), ஸ்டைரிஸ் (4), பிரவீண் குமார் பந்தில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.

முனாப் அபாரம்:கடந்த 2 போட்டியில் "டக்-அவுட்' ஆன வில்லியம்சன் (13), இஷாந்த் பந்தில் போல்டானார். அடுத்து வந்த ஹாப்கின்ஸ் (0), எலியட் (11), நாதன் மெக்கலம் (5), முனாப் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். டிம் சவுத்தி (10), ஜடேஜா சுழலில் சிக்கினார்.

மில்ஸ் அரைசதம்:கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கைல் மில்ஸ், ஒருநாள் அரங்கில் தனது 2 வது அரைசதமடித்து ஆறுதல் அளித்தார். இவர் 3 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 52 ரன் எடுத்தபோது, நெஹ்ரா வேகத்தில் அவுட்டானார். நியூசிலாந்து அணி 30.1 ஓவரில் 118 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் பிரவீண் குமார், முனாப் படேல் தலா 3, நெஹ்ரா 2 விக்கெட் வீழ்த்தினர்.


சூப்பர் ஜோடிநேற்று சேவக்-தோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 1981ல் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில், இந்தியாவின் வெங்சர்க்கார்-சந்தீப் படீல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்திருந்தது.

"1000' பவுண்டரிநியூசிலாந்துக்கு எதிராக நேற்று 16 பவுண்டரிகள் விளாசிய சேவக், ஒருநாள் அரங்கில் 1000 பவுண்டரிகளை கடந்த 7வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 227 போட்டியில் பங்கேற்று 1013 பவுண்டரி அடித்துள்ளார். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின் (1927 பவுண்டரி), இலங்கையின் ஜெயசூர்யா (1500 பவுண்டரி), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1164 பவுண்டரி) "டாப்-3' வரிசையில் உள்ளனர்.
* தவிர இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். ஏற்கனவே சச்சின், கங்குலி (1122 பவுண்டரி) ஆகியோர் 1000 பவுண்டரிகளை கடந்தனர்.
* டெஸ்ட் போட்டியில் 1007 பவுண்டரி விளாசியதன்மூலம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 1000 பவுண்டரிகளை கடந்த 4வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, இலங்கையின் ஜெயசூர்யா உள்ளனர். தவிர, இச்சாதனை படைத்த 2வது இந்திய வீரரானார்.

முனாப் "50' நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கலம்மை அவுட்டாக்கிய இந்திய வீரர் முனாப் படேல், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது விக்கெட்டை(44 போட்டி) பதிவு செய்தார். 

பழிதீர்த்ததுமுத்தரப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 88 ரன்களுக்கு சுருட்டியது. இதற்கு நேற்று இந்திய அணி பழி தீர்த்தது. நியூசிலாந்தை 118 ரன்களுக்கு சுருட்டிக் காட்டியது.


ஸ்கோர் போர்டு

இந்தியா


கார்த்திக் (கே)ஹோப்கின்ஸ் (ப)மில்ஸ் 0(3)
சேவக் (கே)வாட்லிங் (ப)மெக்கலம் 110(93)
கோஹ்லி (கே)ஹோப்கின்ஸ் (ப)சவுத்தி 8(16)
யுவராஜ் (கே)ஹோப்கின்ஸ் (ப)மெக்கே 6(19)
ரெய்னா (கே)வில்லியம்சன் (ப)சவுத்தி 1(3)
தோனி (கே)ஹோப்கின்ஸ் (ப)மெக்கலம் 38(75)
ஜடேஜா (கே)டெய்லர் (ப)சவுத்தி 17(26)
பிரவீண் (கே)மில்ஸ் (ப)சவுத்தி 6(12)
நெஹ்ரா (கே)+(ப)மெக்கலம் 0(12)
இஷாந்த் -அவுட் இல்லை- 8(12)
முனாப் (கே)மெக்கே (ப)மில்ஸ் 7(10)
உதிரிகள் 22
மொத்தம் (46.3 ஓவரில், "ஆல்-அவுட்') 223
விக்கெட் வீழ்ச்சி: 1-0(கார்த்திக்), 2-27(கோஹ்லி), 3-61(யுவராஜ்), 4-66(ரெய்னா), 5-173(சேவக்), 6-199(தோனி), 7-199(ஜடேஜா), 8-207(நெஹ்ரா), 9-207(பிரவீண்), 10-223(முனாப்).பந்துவீச்சு: மில்ஸ் 8.3-1-42-2, சவுத்தி 10-2-49-4, மெக்கே 8-1-31-1, ஸ்டைரிஸ் 6-0-37-0, மெக்கலம் 10-0-35-3, வில்லியம்சன் 4-0-23-0.

நியூசிலாந்து


வாட்லிங் (ப)நெஹ்ரா 2(11)
கப்டில் எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 0(1)
டெய்லர் (கே)தோனி (ப)பிரவீண் 8(14)
எலியாட் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 11(38)
ஸ்டைரிஸ் (ப)பிரவீண் 1(15)
வில்லியம்சன் (ப)இஷாந்த் 13(27)
ஹோப்கின்ஸ் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 0(5)
மெக்கலம் (கே)கார்த்திக் (ப)முனாப் 5(18)
மில்ஸ் (கே)பிரவீண் (ப)நெஹ்ரா 52(35)
சவுத்தி (கே)பிரவீண் (ப)ஜடேஜா 10(5)
மெக்கே -அவுட் இல்லை- 3(12)
உதிரிகள் 13
மொத்தம் (30.1 ஓவரில், "ஆல்-அவுட்') 118
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கப்டில்), 2-6(வாட்லிங்), 3-14(டெய்லர்), 4-22(ஸ்டைரிஸ்), 5-41(வில்லியம்சன்), 6-42(ஹோப்கின்ஸ்), 7-52(எலியாட்), 8-53(மெக்கலம்), 9-80(சவுத்தி), 10-118(மில்ஸ்).பந்துவீச்சு: பிரவீண் 8-2-34-3, நெஹ்ரா 6.1-1-10-2, முனாப் 7-1-21-3, இஷாந்த் 6-1-27-1, ஜடேஜா 3-0-21-1.


Post Comment


2 comments:

sivatharisan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

Dileep said...

நன்றி நண்பா.................

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.