
இது அக்கேஸியா என்ற தாவரத்தின் இலை, மொட்டு மற்றும் பூக்களை உணவாக உண்கிறது.
இந்த சிலந்தி 5 முதல் 6 செ.மீ., நீளம்வரை உள்ளது. முதிர்ந்த அக்கேஸியா இலைகளின் மீது வாழ்கிறது. இதை "பகீரா கிப்லிங்கி' என்று அழைப்பர்.
அக்கேஸியாவின் மொட்டை எளிதில் இந்த சிலந்தியால் சாப்பிட முடியாது. அங்கே காவல் எறும்பு ஏராளம் உள்ளது.
சிலந்தி அக்கேஸியாவின் தண்டில் உள்ள பள்ளத்தில் மறைந்து வாழ்கின்றது. சிலந்தி காவல் எறும்புகளை கடந்து சென்றுதான் தன் உணவை சாப்பிட வேண்டும். இதுவரை ஆராய்ச்சியாளர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகளை கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால், "பகீரா கிப்லிங்கி' சிலந்தி மட்டும்தான் தாவர உண்ணி.
0 comments:
Post a Comment