
சர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..!
பெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்கள்தான் முதன்முதலில் கி மு 7000ல் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள்என்று சொல்லப்படுகிறது.
அந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் வாழ்ந்திருப்பார்கள். சிலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், பலரின் பெயர்கள் பலரின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருகக் கூடும். கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் ஏராளம். அவர்களில் ஒரு சிலரை பற்றிய பதிவுகள் கிடைத்துள்ளன .
தியானோவும்.. பித்தாகரசும்..!
தியானோ என்ற பெண் விஞ்ஞானி கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கி.மு. 546 ல் கிரீஸ் நாட்டை சேர்ந்த கரோகொனா என்ற நகரில் பிறந்தார். இவரின் தந்தை ப்ரோன்ட்னாஸ். இவர் ஓர் அற்புதமான கணிதவியலாளர்.இயற்பியல், மருத்துவம், குழந்தை மனநலம் மற்றும் நிர்வாக திறமைகளில் கைதேர்ந்தவர். அந்தக் காலத்தில் வாழ்ந்த பித்தாகராஸ் என்ற கணிதவியலாளர் 'சுமோஸ்' நகருக்கு கி.மு 531 .ல் வந்ததை, கேள்விப்பட்டு, அவரை நாடி தியானோ வந்தார். பின்னர் அவரிடம் கணிதம் பயின்றதுடன், மிகவும் ஈடுபாடு கொண்டு பித்தாகரசையே திருமணமும் செய்துகொண்டார். தியானோ பித்தாகரசை விட 36 வயது சிறியவர். பின்னர் பித்தாகரசும், தியாநோவும் இணைந்து, பித்தாகரசின் கல்வி நிறுவனத்தைக் கவனித்துக்கொண்டனர். இவர்களுக்கு டாமோ, மைய்யா, அரிக்நாட் என்ற மூன்று பெண் மகவுகளும், ம்நோசார்கஸ், தெலேகஸ் என்ற இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன.
தங்க சராசரியும்.. பித்தகராஸ் தேற்றமும்..!
தியானோ, சாமோஸ் மற்றும் குரோட்டன் நகர்களில் கணிதம் கற்றுத் தந்தார். இயற்கையில் பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் கணித அமைப்புகளை கவனித்து, அதன் தொடர்பாக 'தங்க சராசரி/ விகிதம்' (golden ratio) என்ற அற்புதமான கணிதவியல் புத்தகம் எழுதினர். இதனை கலை மற்றும் கட்டிடக்கலையில் அனைவரும் பயன்படுத்தலாம். இதனடிப்படையில் அக்காலத்தில் கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிடங்களும், நினைவகங்களும் எழுப்பப்பட்டன. இதில் முக்கியமாக முதன்மை எண்கள் பற்றியும் எழுதியுள்ளார். பித்தாகரசின் பள்ளியில் 38 பெண்கள் ஆசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தனர். 300 மாணவர்கள் தங்கி சமூகமாக வாழ்ந்தனர். எனவே தியானோ மற்றும் பிற பெண்கள் எழுதியவை எல்லாம் பித்தாகராஸ் என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது. பித்தகராஸ் தேற்றத்தை எழுதியவர் தியானோதான் என்று சொல்லப்படுகிறது.
தியானோவின்.. எழுத்துக்கள்..!
தியானோ , பிரபஞ்சம் என்பது சூரியன், சந்திரன், சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் , பூமி , பூமியின் மையம் மற்றும் விண்மின்கள் அடங்கிய 10.அடர்வான கோளங்கள்அடங்கியது தான் பிரபஞ்சம் என கூறினார்.மேலும் பூமி என்ற மையத்தில் நெருப்பை சுற்றி சுற்றுகின்றன என்றார். land விண்மின்கள் என்பவைநகராமல் நிலையாக இருக்கின்றன என நம்பினார். தியானோ பித்தாகரசின் வாழ்க்கை, அவரின் பொருள் பொதிந்த கருத்துரைகள்,விண்வெளியியல்

பித்தாகரசின் இறப்புக்குப் பிறகு மகள்களின் உதவியுடன் தியானோ, பித்தாகராஸ் கல்வி நிறுவனத்தை, தலைமை பொறுப்பேற்று செம்மையாக நடத்தினார்.தியாநோவும் அவரது மகள்களும் மிகச் சிறந்த மருத்துவர்களாக விளங்கினர். டாமோ, மைய்யா மற்றும் அறிக்நோட் என்ற இவரின் பெண்கள் பித்தாக்ராஸ் பள்ளியை பெருமையுடன் நடத்த உதவினர். இவர்கள் மூவரும தத்துவஞானிகள் தான்.பித்தாகரசின் மகளான தாமோ அவரின் புத்தகங்களை பத்திரமாக பாதுகாத்து வெளியிட்டார். மகன்களில் ஒருவரான டேலஜெஸ்,பித்தகராஸ் பள்ளி அறிவுபுர்வமாய் வளர்ச்சி பெற உண்டவினார். பித்தாகரசின் கல்வி நிறுவனம் அக்காலத்தில் கணிதம் போதித்ததுடன், பித்தகர்சின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் கணிதம் மற்றும் தத்துவத்தின் மையக்குடமாக விளங்கியது. தியாநோவின் முயற்சியும் , உழைப்பும் இல்லாவிட்டால் பித்தாகரசின் இறப்புக்குப் பிறகு, அவரின் கொள்கைகள் மத்தியதரைக் கடல் பகுதியைத் தாண்டி பரவி இருக்க வாய்ப்பில்லை
தியானோ, பித்தாகரசின் சந்ததி ..!
தியானோவின் புத்தகங்களில் புகழ் பெற்றதும் கணிதத் தகவல்களை சுவையாகத் தந்ததும் தங்க சராசரி என்ற புத்தகமே..! அவரைப் பற்றிய குறிப்புகளை எதெநியஸ், சுயிஸ் ,டியோஜெனிஸ், மற்றும் லாண்டியஸ் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிவைத்துள்ளனர். டியோஜெனிசின் கூற்றுப்படி, தியோனாவின் எழுத்துக்களும், கடிதங்களும் மிகவும் சுவையானதாக இருந்ததது தெரியவந்தது. தியோனாவின் மகன்களும், மகள்களும், ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, சமயபரப்பாளர்களாக மற்றும் பெற்றோரின் தத்துவங்களை போதிப்பவர்களாக, சிறந்த மருத்துவர்களாக செயல்பட்டனர். இதன் பின்னர் சுமார் 200௦ ஆண்டுகளுக்கு பித்தாகரசின் பள்ளி புகழ்பெற்று விளங்கியது.
0 comments:
Post a Comment