
முத்தரப்பு தொடரில் வென்றதை விட, சார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக பெற்ற வெற்றிதான் சிறந்தது,'' என, இலங்கை அணி கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் இந்திய அணி, இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மிகப்பெரிய அளவிலான இந்த வெற்றிக்கு, இலங்கை கேப்டன் சங்ககரா இரண்டாவது இடம் தான் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து இவர் கூறியது:
இந்திய அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி என்றால், அது சார்ஜாவில் பெற்றது தான். கடந்த 2000, அக்டோபரில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. மிகப்பெரிய அணிக்கு எதிராக பெற்ற, இந்த மிகப்பெரிய வெற்றிதான் சிறந்தது.
வெற்றி முக்கியம்:
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கத்தில் பெற்ற இந்த வெற்றி மறக்க முடியாது. அணியின் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த வெற்றி, எங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இருப்பினும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவது தான் முக்கியம்.
"ரெபரல்' தேவை:
இந்திய வீரர்களுக்கு எதிராக தவறான அவுட் கொடுக்கப்பட்டது போன்று நடந்தவிடக் கூடாது என்று தான், இந்த தொடர் முழுவதும் "அம்பயர் ரெபரல்' முறை, வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் இந்திய அணியினர் வேண்டாம் என மறுத்தனர். இல்லையெனில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அனைத்து போட்டிகளிலும் கட்டாயமாக "அம்பயர் ரெபரல்' முறையை கொண்டு வரவேண்டும். இவ்வாறு சங்ககரா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment