சேவக் சதம் அடிப்பதை தடுக்கும் வகையில் "நோ பால் வீசிய ரந்திவிற்கு, ஒரு போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் போர்டு தடை விதித்துள்ளது. தில்ஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் "வில்லனாக கருதப்பட்ட கேப்டன் சங்ககரா தண்டனையில் இருந்து தப்பினார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்திவ், வேண்டுமென்றே "நோ- பால் வீசினார். இதையடுத்து "நோ பாலில் அடித்த சிக்சர் வீணாகி, தனது 13வது சதத்தை எட்ட முடியாத சோகத்தில் வெளியேறினார் சேவக்.
ரந்திவ் "நோ பால் வீசியதுக்கு இலங்கை கேப்டன் சங்ககரா தான் காரணம் என செய்திகள் வெளியாகின. ஆனால், உண்மையான வில்லன் தில்ஷன் தான் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள "தி ஐலாந்து என்ற பத்திரிகையில் வெளியான செய்தியில்,""பீல்டிங் செய்து கொண்டிருந்த தில்ஷன், "ஹலோ ரந்திவ், உனக்கு விருப்பமாக இருந்தால், இந்த பந்தை "நோ பாலாக வீசி விடு, என சிங்கள மொழியில் தெரிவித்துள்ளார். இதை மற்ற வீரர்கள் யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் தான் ரந்திவ் "நோ பால் வீசியுள்ளார்,என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக விசாரிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு சார்பில் 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இவர்களிடம், தில்ஷன் சொன்னதால் தான் "நோ பால் வீசியதாக ரந்திவ் ஒப்புக்கொண்டுள்ளார். பின் குழுவினர் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் போர்டு(எஸ்.எல்.சி.,) கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சங்ககராவுக்கு எச்சரிக்கை:
இது தொடர்பாக எஸ்.எல்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
தவறு செய்த ரந்திவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. இவருக்கு, இந்தியாவுடனான போட்டிக்கான சம்பளம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவர், இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது. தவிர, "நோ பால் சர்ச்சையில் தலையிட்ட தில்ஷனுக்கு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. கிரிக்கெட்டுக்கு அவமதிப்பும், விளையாட்டு உணர்வுக்கு பாதிப்பும் ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கேப்டன் சங்ககரா பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வி பயம் காரணம்
"நோ- பால் பிரச்னை பற்றி "டுவிட்டர் இணையதளத்தில் சேவக் கூறியது:இலங்கைக்கு எதிரான போட்டியில் 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே, வெற்றியை நெருங்கிவிட்டோம். இது, இலங்கை வீரர்களை கவலையடையச் செய்து விட்டது. தோல்வி பயத்தில் தான் ரந்திவை "நோ பால் வீசச் செய்துள்ளனர். உண்மையில் வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கை எப்போதும் போலத் தான் செல்லும். சுயநலமில்லமால், சரியான முறையில் அணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.
இவ்வாறு சேவக் தெரிவித்துள்ளார்.
பொறுப்பேற்கிறேன்: சங்ககரா
இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" எல்லோரும் வெறுப்படைகின்ற வகையில் சம்பவம் நடந்துவிட்டது. இது இலங்கை போர்டுக்கும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இதில் எந்த வீரர் தவறு செய்திருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து வீரர்கள் கூறியது அனைத்தையும் போர்டு அதிகாரிகள் பதிவு செய்தனர். எனது கருத்தையும் நான் மானேஜரிடம் தெரிவித்தேன். குற்றம் செய்தது ஒருவரோ அல்லது ஐந்து பேரோ, முடிவில் இதன் விளைவை அணி சந்தித்துத் தான் ஆகவேண்டும். அடுத்த வரும் போட்டிகளில் வெற்றிபெற்று சிறந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்போம்,என்றார்.
0 comments:
Post a Comment