
இத்தகைய பூச்சிகளுக்கு இயற்கையிலேயே மோப்ப சக்தி அதிகம். இதனால் பாலூட்டிகள் போன்ற இதர விலங்குகள் தங்கள் உணவுக்காக தாவரங்களை நாடி வரும் போது, அதை இருப்பிடமாகக் கொண்டுள்ள பூச்சிகள் தங்கள் மோப்ப சக்தியால் அதை முதலிலேயே அறிந்து கொள்ளும்.
எனவே உயிர் பிழைக்கும் நோக்கில் அவை தாவரங்களில் இருந்து தரையில் விழுந்து விடுகின்றன. விலங்குகள் சென்ற பின் அந்தப் பூச்சிகள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புவதும் தெரியவந்துள்ளது. ஒரு சில விநாடிகள் அசட்டையாக இருந்தாலும் விலங்குகளுக்கு பூச்சிகள் உணவாகிவிடும் என்பதால் இயற்கையிலேயே அந்த பூச்சிகளுக்கு எச்சரிக்கை உணர்வு உள்ளது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஹைபா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தாவரங்களும், பூச்சிகளும் குறித்து நடத்திய ஆய்வுத் தகவல் ‘நடைமுறை உயிரியல்Õ என்ற அறிவியல் இதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
2 comments:
நல்ல தகவல் நண்பா
நன்றி சிவா
Post a Comment