நேற்று நடந்த ஆட்டத்தில் 34-வது ஓவர் முடிந்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது ஷேவாக் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
35-வது ஓவரை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வீசினார். முதல் பந்தை ஷேவாக் அடிக்காவிட்டாலும், விக்கெட் கீப்பர் சங்கக்கரா பிடிக்க தவறியதால் அது பவுண்டரிக்கு ஓடியது.
இதனால் `பைஸ்' வகையில் இந்தியாவுக்கு 4 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து வெற்றி, சதம் இரண்டுக்கும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அடுத்த 2 பந்துகளில் ஷேவாக்கால் ரன் எடுக்க முடியவில்லை. 4-வது பந்தை ஷேவாக் `லாங்-ஆப்' திசையில் அட்டகாசமாக சிக்சருக்கு தூக்கினார். சதத்தை எட்டி விட்டதாக ஷேவாக் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதால், ஷேவாக்கின் 13-வது சத வாய்ப்பு நழுவியது.

அதாவது `நோ-பால்' மூலம் எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கிடைத்தது. அந்த ரன்னே இந்திய அணியின் வெற்றி இலக்கையும் தொட்டு விட்டது. இதனால் சிக்சர் தேவையில்லாமல் போய்விட்டது. அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆனால் ஷேவாக் சதத்தை நிறைவு செய்யக்கூடாது என்பதற்காக ரந்தீவ் வேண்டுமேன்றே `நோ-பால்' வீசியதாக வர்ணணையாளர்கள் குற்றம் சாட்டினர். ரந்தீவ் பந்து வீசும் போது, காலை லைனுக்கு மிகவும் வெளியே எடுத்து வைத்து வீசினார்.
அவர் திட்டமிட்டு நோ- பாலாக வீசியது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் சதத்தை எட்டாவிட்டாலும் ஷேவாக் கவலைப்படவில்லை. ஷேவாக் கூறும் போது `கிரிக்கெட்டில் இப்படி அடிக்கடி நடக்கும்.
அதாவது பேட்ஸ்மேன் 99 ரன்களில் இருக்கும் போது, அணியின் ஸ்கோரும் சமமாக இருந்தால், பவுலர்கள் நோ-பால் அல்லது வைடாக போடத்தான் முயற்சிப்பார்கள். இது தான் கிரிக்கெட். அவர்களுக்கு இது நியாயம் தான். இது ஒரு பிரச்சினை இல்லை' என்றார்.

இலங்கை கேப்டன் சங்கக்கரா கூறுகையில், `ஷேவாக்கின் பேட்டிங் அருமையாக இருந்தது. அந்த நோ- பாலால் சதம் மறுக்கப்படும் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த சதத்திற்கு ஷேவாக் தகுதியானவர்' என்றார்.
சேவாகிடம் மன்னிப்பு கேட்டார் ரந்தீவ்:
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் சேவாக் 99 ரன்கள் எடுத்தார். அப்போது இலங்கை பவுலர் ரந்தீவ் வேண்டும் என்றே நோ பால் போட்டு தன்னை சதம் அடிக்க விடாமல் தடுத்ததாக சேவாக் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் ரந்தீவ் சேவாகை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment