அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

உலக மனிதநேய தினம்


இன்று உலக மனிதநேய தினம்.போர் ,நோய்,போசாக்கின்மை ,இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டத்தே உலக மனித நேய தினம்.
தங்களது நாட்டை குடும்பத்தை விட்டு ஆதரவு அற்றவர்களுக்கு உதவுவதற்காக சேவையாற்றுபவர்கள் மனிதநேய பணியாளர்கள்.


மனித நேயப்பணியாளர்கள் மீது அடிக்கடி மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.2008 ,2009 ஆண்டுகளில் 100 இற்கு மேற்ப்பட்ட மனிதநேய பணியாளர்கள் கொல்லகப்பட்டு உள்ளார்கள்.


உலக அரங்கிலே மிகவும் அதிர வைத்த மனிதநேய பணியாளர்கள் தாக்குதல்
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  மாதம் 4 ஆம் நாள் இலங்கை ,திருகோணமலை மூதூர்லில்  பாரிசைத்  தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action  Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள்  மூதூரில் உள்ள  அவர்களின்   அலுவலகத்தில்  மரண தண்டனைவிதிக்கப்படும்  பாணியில்  சுட்டுக்கொல்லப்பட்டனர்

2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின்  பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் . இந்நிலையிலேயே 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில்  இதன்  உள்ளூர்ப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட னர் .
இத்தகைய தைரியம் மிக்க தனிநபர்கள் அகில ரீதியான விழுமியமாகவும் கடமையாகவும் அமைந்துள்ள மனித நேயம் என்கின்ற தமது பொதுக்கடப்பாடின்
அடிப்படையில் ஜக்கியப்பட்டுள்ளார்கள்.இவர்கள் எல்லோருக்காகவும் பாடுபடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் வேலையைத் தடுப்பதன் மூலம் பாதிக்கப்படுவது வடுப்பாடுடையவர்களேதவிர வேற யாரும் அல்ல.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.