
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடோல்ப் ஹிட்லர். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் அதில் பற்று இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் யூத மதத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது உடன் பிறந்தவரின் மகன் அலெக்சாண்டர் ஸ்டூவர்ட் ஹ¨ன்டன் (61) நியூயார்க்கின் லாஸ் ஐஸ்லாந்தில் உள்ளார். அவரது எச்சிலை எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
இவர் தவிர அவரது நெருங்கிய உறவினர்கள் 39 பேரிடம் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு இதேபோன்று பரிசோதிக்கப்பட்டது. அதில், அவர் யூத மதத்தை சேர்ந்தவர் என்றும் அவரது முன்னோர் வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை புலனாய்வு பத்திரிகையாளர் ஜூன்பால் முல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment