
வெள்ளி கிரகம் குறித்து நாம் அளைவரும் அறிந்திருப்போம். சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம். புதன் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள கிரகம் வெள்ளி.இந்தக் கிரகத்தின் தன்மையை விளக்குவது சற்று கடினமானது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதனை வேறு விதமாக விளக்குகின்றனர். நாமெல்லாம் நகரம் என்பது எப்படி இருக்கும் என்று கற்பனைத்தான் செய்து பார்த்திருப்போம். ஆனால் அதனை அப்படியே கண் மூன் நிறுத்துவது போன்று வெள்ளி கிரகம் இருப்பதாக கூறுகிறார்கள். அந்தக் கிரகத்தின் அமைப்பு அங்கு நிலவும் 500 டிகிரிக்கும் மேற்பட்ட வெப்பமும் தான் அறிவியலாளர்களை அவ்வாறு கூறச் செய்திருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அங்கு ஒரு சொட்டு நீர் கூடக் கிடையாது. அங்கு அனுப்பப்படும் ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் செயலிழிந்து விடுகின்றது. இந்த நிலை ஏன் என்று ஜரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
வெள்ளி கிரகத்துக்கும் பூமிக்கும் கிட்டத்தட்ட ஓரே வயதுதான். இரு கிரகங்களும் ஓரே கால கட்டத்தில் தான் தோன்றியுள்ளன. மேலும் இரு கிரகங்களுக்கு அருகருகில் தான் தோன்றியுள்ளன. மேலும் இரு கிரகங்களும் ஓரே நேரத்தில் சூரியனில் இருந்து வெளிப்பட்ட துகள்களிலிருந்து தான் உருவாக்கியிருக்கக் கூடும். ஆனால் வெள்ளி கிரகத்தில் பூமியில் இருக்கும் நீரின் அளவில் 0.001% அளவு நீரே உள்ளது. இதற்கான காரணத்தை வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெரில் அனுப்பப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி ஓடம் கண்டுபிடித்துத்தந்தது. கடந்த வருடம் அந்த ஆராய்ச்சி ஓடம் கொடுத்த தகவல்களின்படி அங்கு இரவு நேரங்களில் ஹைடிரஜனும்,ஒட்சிஜனும் 2.1 விகிதத்தில் வெளிப்படுவதாகத் தகவல் இருந்தது. இது நீர் இருப்பதற்கான ஆதாரமாகும்.
வெள்ளியில் இருந்த சிறிதளவு நீரும் சூரியனில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளின் தாக்கத்தால் பிறகு மாறிப் போய் விடுகிறது. மீண்டும் அடுத்த முறை வீனஸ் எக்ஸ்பிரஸ் காலைப் பொழுதில் சென்று ஆய்வு செய்த பொது சுமார் 300 கிலோகிராம் அளவுக்கு ஹைடிரஜன் விண்வெளியில் கலப்பதாகத் தகவல் தந்தது. ஆனால் ஒக்ஸிஜன் இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை. அதற்கான தேடுதல்
2 comments:
நல்ல தகவல்!
நன்றி S.K
Post a Comment