அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

இலங்கை சாம்பியனானது

Kumar Sangakkara with the series trophy

முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தில்ஷன் சதம் கைகொடுக்க, அபாரமாக ஆடிய இலங்கை அணி கோப்பை கைப்பற்றியது.


இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து வெளியேறியது. இந்தியா, இலங்கை அணிகள் மோதிய பைனல் போட்டி, நேற்று தம்புலா ரங்கிரி மைதானத்தில் நடந்தது. "டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில், ரவிந்திர ஜடேஜா நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் ரோகித் சர்மா இடம் பெற்றார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 
ஆரம்பம் கலக்கல்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, சூப்பர் துவக்கம் கண்டது. ஜெயவர்தனா நிதானமாக ஆட, தில்ஷன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, இந்த முறை பலன் அளிக்க வில்லை. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜெயவர்தனா (39) அவுட்டானார். அடுத்து வந்த தரங்கா (6), சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். 


Tillakaratne Dilshan and Mahela Jayawardene shared the best opening stand of the tournament

தில்ஷன் சதம்:
பின்னர் தில்ஷனுடன், சங்ககரா இணைந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை, நாலாபுறமும் சிதறடித்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒரு நாள் அரங்கில் 8 வது சதம் கடந்தார். 11 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 110 ரன்கள் குவித்த தில்ஷன், பிரவீண் பந்து வீச்சில் வெளியேறினார்.

Tillakaratne Dilshan celebrates his hundred

சங்ககரா மிரட்டல்:
மறுமுனையில் கேப்டன் சங்ககரா, ஒரு நாள் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார். பொறுப்புடன் ஆடிய இவர், இஷாந்த சர்மா வீசிய ஆட்டத்தின் 44 வது ஓவரில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து மிரட்டினார். இவர் 71 ரன்களுக்கு (7 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய கபுகேதரா (12), மாத்யூஸ் (1), பெரேரா (6), ரந்திவ் (4) கைகொடுக்க வில்லை.

Kumar Sangakkara is airborne as he pulls the ball

கடைசி கட்டத்தில் சமர சில்வா 26 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 299 ரன்கள் எடுத்தது. சில்வா (26), குலசேகரா (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா தரப்பில் முனாப், இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 
ஆரம்பம் மோசம்:
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இத்தொடரில் தொடர்ந்து 2 வது முறையாக "டக்-அவுட்டானார்' துவக்க வீரர் தினேஷ் கார்த்திக். மறுமுனையில் வழக்கம் போல் அதிரடி ஆட்டம் ஆடினார் சேவக். ஆனால் இந்த முறை சேவக்கிற்கு அதிர்ஷ்டம் இல்லை. 28 ரன்கள் எடுத்திருந்த போது, ரன்-அவுட் செய்யப்பட்டார்.

Dinesh Karthik is disappointed after his dismissal


யுவராஜ் "அவுட்':
பின்னர் யுவுராஜ், விராத் கோஹ்லி இணைந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது. இரண்டு முறை கண்டத்திலிருந்து தப்பிய யுவராஜ் (26), பெரேரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆறுதல் அளித்த விராத் கோஹ்லி 37 ரன்களுக்கு அவுட்டானார். 

தோனி போராட்டம்:அடுத்து வந்த தோனி தனி ஆளாகப் போராட ஆரம்பித்தார். இவருடன் இணைந்த ரெய்னா, வந்த வேகத்தில் 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் இவரது விளாசல் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. ரந்திவ் பந்தை சிக்சருக்கு விரட்ட நினைத்த இவர், 29 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

MS Dhoni flays one through the off side

முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா (5), இந்த முறையும் ஏமாற்றமே அளித்தார். மறுமுனையில் ஒரு நாள் அரங்கில் 37 வது அரை சதம் கடந்தார் தோனி. பின்வரிசையில் இஷாந்த் (0), நெஹ்ரா (2) சொதப்பினர். கடைசி வரை போராடிய தோனி 67 ரன்களுக்கு அவுட்டாக, 46.5 ஓவர் முடிவில், "ஆல்-அவுட்டான' இந்திய அணி 225 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இலங்கை தரப்பில், பெரேரா, ரந்திவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

The victorious Sri Lankan team

தோனிக்கு முதல் "அடி'
தோனி தலைமையில் இந்திய அணி கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள், 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என, மொத்தம் நான்கு முறை சாதித்தது. ஆனால் நேற்று நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் தோல்வி அடைந்தது. இதனால் இலங்கை மண்ணில், தொடர்ந்து 5 வது முறையாக, ஒரு நாள் தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார் தோனி.


முனாப்-தில்ஷன் மோதல்
தம்புலாவில் நடந்த நேற்றைய பைனல் போட்டியின் போது, இந்திய வீரர் முனாப் ஆட்டத்தின் 6 வது ஓவரை வீசினார். 5 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜெயவர்தனா. அப்போது மற்றொரு துவக்க வீரர் தில்ஷன், முனாப் படேலிடம் ஏதோ கூறினார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கேப்டன் தோனி தலையிட்டு முனாப் படேலை அமைதிபடுத்தினார்.
ஜெயவர்தனா "9000'நேற்றைய போட்டியில் 36 ரன்கள் எடுத்த போது, இலங்கை வீரர் ஜெயவர்தனா ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 9000 ரன்கள் எட்டினார். தவிர, இலங்கை தரப்பில், இந்த இலக்கை எட்டிய 3 வது வீரரானார். 326 ஒரு நாள் போட்டிகளில் ஜெயவர்தனா, 9003 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் இலங்கையின் ஜெயசூர்யா (13, 362), டி சில்வா (9284) ஆகியோர் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
கார்த்திக் புலம்பல்
முத்தரப்பு தொடரில் காம்பிருக்குப் பதில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். நேற்றைய பைனல் போட்டியின் முதல் ஓவரில், மலிங்கா "ஒயிடாக' வீசிய பந்தை தேவையில்லாமல் அடிக்க முற்பட்ட இவர், அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்பால் அவுட்டானார். வெறுப்புடன் பெவிலியன் திரும்பிய இவர், சக வீரர்களிடம் பந்து தொடையில் பட்டுச் சென்றது என புலம்பினார். இத்தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் (14, 10, 9, 0, 0) வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கார்த்திக். இனி வரும் தொடர்களில் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கிடைப்பது சிரமம் தான்.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.