அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

கூகுள் மீது வழக்கு



ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம். 



கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், 'கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம். 

ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது. 'டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. 

அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்' என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன். கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.