அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

Jacob Oram celebrates Praveen Kumar's dismissal with his team-mates

முத்தரப்பு தொடரை இந்திய அணி படுமோசமாக துவக்கியது.நேற்று நடந்த முதல் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆட, 88 ரன்களுக்கு சுருண்டது. 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி நியூசிலாந்து அணிக்கு, கேப்டன் ரோஸ் டெய்லரின் அதிரடி ஆட்டம் பக்கபலமாக அமைந்தது. 


இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. தம்புலவில் நேற்று நடந்த முதல் போட்டியில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் ரோஸ் டெய்லர், பேட்டிங் தேர்வு செய்தார். 


திணறல் துவக்கம்:
நியூசிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. பிரவீண் குமார் பந்து வீச்சில், 11 ரன்களுக்கு அவுட்டானார் கப்டில். இங்ராம் (12) நெஹ்ராவிடம் வீழ்ந்தார். அறிமுக வீரராக களமிறங்கிய வில்லியம்சன் "டக்' அவுட்டானார். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது நியூசிலாந்து.

Ashish Nehra trapped Jacob Oram leg before

சூப்பர் ஜோடி:
இதற்கு பின் கேப்டன் ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் இணைந்து அணியை சரிவிலிருந்து சூப்பராக மீட்டனர். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி, இந்திய பந்து வீச்சை சிதறடித்தது. ஒரு நாள் அரங்கில் ரோஸ் டெய்லர் 16வது மற்றும் ஸ்டைரிஸ் 25 வது அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்த நிலையில், ஸ்டைரிஸ் (89) அவுட்டானார். இவர் 9 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். அடுத்து வந்த ஓரம் (14) ஏமாற்றினார். 


சதம் நழுவல்: 
ரோஸ் டெய்லர் 95 ரன்களுக்கு (8 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகி, சதத்தை நழுவ விட்டார். எலியட் (7) சொதப்பினார். "டெயிலெண்டரான' டபி(19) ஓரளவு ரன் சேர்த்தார். நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 288 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய தரப்பில் நெஹ்ரா 4, பிரவீண் 3 விக்கெட் வீழ்த்தினர். MS Dhoni is run out by Daryl Tuffey


சேவக் அவுட்:
சற்று கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, சேவக், தினேஷ் கார்த்திக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. 3 பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் சேர்த்த சேவக், மில்ஸ் வேகத்தில் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே தினேஷ் கார்த்திக்கும் (14) அவுட்டானார். 


சுருண்டது இந்தியா:
பின் ரோகித் சர்மாவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். டபி பந்து வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில் ரோகித் (4) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரெய்னாவையும் (6) அவுட்டாக்கி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார் டபி. அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்புடன் களமிறங்கிய தோனிக்கு, யுவராஜ் "வில்லனாக' மாறினார். டபி வீசிய பந்தை தட்டி விட்டார் தோனி. மறுமுனையில் தேவையில்லாமல், ரன் ஓட துவக்கம் தந்தார் யுவராஜ். இதனால் அவசரப்பட்ட தோனி (2), ரன் அவுட்டானார். 25 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார் யுவராஜ். பின்வரிசையில் பிரவீண் (1), மிதுன் (4), நெஹ்ரா (4) சொதப்ப, 29.3 ஓவர் முடிவில் "ஆல்-அவுட்டான' இந்திய அணி வெறும் 88 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வி அடைந்தது. 


நியூசிலாந்து தரப்பில் டபி 3, மில்ஸ், ஓரம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இவ்வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்றது. தவிர, போனசாக ஒரு புள்ளி பெற்றது.


Daryl Tuffey is delighted after dismissing Suresh Raina

 குறைந்த ஸ்கோர்நியூசிலாந்துக்கு எதிராக நேற்று 88 ரன்கள் சேர்த்த இந்திய அணி, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது 5 வது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்: 
ரன் எதிரணி இடம் ஆண்டு54 இலங்கை சார்ஜா 2000
63 ஆஸி., சிட்னி 1981
78 இலங்கை கான்பூர் 1986
79 பாகிஸ்தான் சியால்கோட் 1978
88 நியூசிலாந்து தம்புலா 201050 விக்கெட்தம்புலவில் நடந்த நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் ஹாப்கின்சை அவுட்டாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 50 விக்கெட்(41 போட்டி) கைப்பற்றி அசத்தினார்.


ஸ்டைரிஸ் "4000'நேற்றைய போட்டியில், 58 ரன்கள் எடுத்திருந்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்டிய 7 வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் ஸ்டைரிஸ். இவர், 166 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கு முன், பிளமிங் (8007 ரன்), ஆஸ்லே (7090), கிறிஸ் கெய்ர்ன்ஸ் (4881), மெக்மிலன் (4707), குரோவ் (4704), ஹாரிஸ் (4379) ஆகியோர் நியூசிலாந்து தரப்பில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
டக் - அவுட்
 தனது முதல் ஒரு நாள் போட்டியில், நேற்று களமிறங்கிய நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், டக்-அவுட்டானார். இதன் மூலம் அறிமுக போட்டியில், களமிறங்கி "டக்-அவுட்டான' 15 வது நியூசிலாந்து வீரரானார்.ஸ்கோர் போர்டு


The scoreboard depicts India's tale of miseryநியூசிலாந்து


இங்ராம் (கே) தோனி (ப) நெஹ்ரா 12 (17)
கப்டில் (கே) தோனி (ப) பிரவீண் 11 (6)
டெய்லர் எல்.பி.டபிள்யு., (ப) நெஹ்ரா 95 (113)
வில்லியம்சன் (ப) பிரவீண் 0 (9)
ஸ்டைரிஸ் (ப) ஓஜா 89 (95)
ஓரம் எல்.பி.டபிள்யு., (ப) நெஹ்ரா 14 (10)
எலியட் (ஸ்டம்) தோனி (ப) யுவராஜ் 7 (13)
ஹாப்கின்ஸ் (கே) கார்த்திக் (ப) பிரவீண் 10 (11)
டபி (கே) ஓஜா (ப) நெஹ்ரா 19 (13)
மில்ஸ் -ரன் அவுட் (ரெய்னா)- 9 (5)
மெக்கேய் -அவுட் இல்லை- 0 (1)
உதிரிகள் 22
மொத்தம் (48.5 ஓவரில் ஆல்-அவுட்) 288
விக்கெட் வீழ்ச்சி: 1-15 (கப்டில்), 2-27 (இங்ராம்), 3-28 (வில்லியம்சன்), 4-218 (ஸ்டைரிஸ்), 5-236 (ஓரம்), 6-241 (டெய்லர்), 7-254 (எலியட்), 8-277 (ஹாப்கின்ஸ்), 9-288 (டபி), 10-288 (மில்ஸ்).பந்து வீச்சு: பிரவீண் குமார் 9-3-43-3, நெஹ்ரா 9.5-1-47-4, மிதுன் 4-0-24-0, ஓஜா 10-0-58-1, ஜடேஜா 9-0-63-0, யுவராஜ் 4-0-23-1, சேவக் 3-0-17-0.


இந்தியா


கார்த்திக் எல்.பி.டபிள்யு., (ப) டபி 14 (20)
சேவக் (கே) ஹாப்கின்ஸ் (ப) மில்ஸ் 19 (23)
ரோகித் (கே) டெய்லர் (ப) டபி 4 (11)
யுவராஜ் (கே) டெய்லர் (ப) மெக்கேய் 5 (25)
ரெய்னா (கே) ஸ்டைரிஸ் (ப)டபி 6 (6)
தோனி -ரன் அவுட் (டபி)- 2 (9)
ஜடேஜா (கே) ஸ்டைரிஸ் (ப) வில்லியம்சன் 20 (44)
பிரவீண் (கே) டெய்லர் (ப) ஓரம் 1 (8)
மிதுன் (கே) டெய்லர் (ப) ஓரம் 4 (16)
நெஹ்ரா (கே) ஓரம் (ப) மில்ஸ் 4 (11)
ஓஜா -அவுட் இல்லை- 0 (4)
உதிரிகள் 9
மொத்தம் (29.3 ஓவரில் ஆல்-அவுட்) 88
விக்கெட் வீழ்ச்சி: 1-39 (சேவக்), 2-39 (கார்த்திக்), 3-44 (ரோகித்), 4-50 (ரெய்னா), 5-53 (தோனி), 6-62 (யுவராஜ்), 7-67 (பிரவீண்), 8-82 (மிதுன்), 9-84 (ஜடேஜா), 10-88 (நெஹ்ரா). பந்து வீச்சு: மில்ஸ் 6.3-2-26-2, டபி 8-1-34-3, மெக்கேய் 6-0-11-1, ஓரம் 6-0-15-2, வில்லியம்சன் 3-1-2-1.

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.