
பயர்பாக்ஸ் 4ன் சோதனை பதிப்பு 3 தற்போது கிடைக்கிறது. அதிகாரபூர்வமாக, மொஸில்லாவின் இணைய தளத்தில் கிடைக்காவிட்டாலும், Softpedia (http://www.softpedia.com/get/Internet/Browsers/MozillaFirefoxFinal.shtml) போன்ற தளங்கள் இதனை டவுண்லோட் செய்திடத் தருகின்றன.
இதற்கான குறிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. அது மொஸில்லாவினால் மட்டுமே தரப்படும். எனினும்,இதனைப் பிற இடங்களில் இருந்து இறக்கிப் பயன்படுத்திப் பார்த்த சிலர் இதில் உள்ள மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 7 இயக்கத்திற்கான மல்ட்டி டச் சப்போர்ட் இதில் தரப்பட்டுள்ளது. அத்துடன் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை இயக்குவதில் உள்ள காலநேரம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
முழுமையான இறுதி பயர்பாக்ஸ் தொகுப்பு 4 வெளியாவதற்கு முன்னர், இன்னும் இரண்டு சோதனைத் தொகுப்புகளை, பயர்பாக்ஸ் வெளியிட உள்ளது. அடுத்த ஐந்தாவது சோதனைத் தொகுப்பு, மொஸில்லாவின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அதில் பயர்பாக்ஸ் இயங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டமைப்பு மாற்றம், இணைய பிரவுசர் இயக்கத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து, பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளைத் தரும் என எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment