அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

புளு ரே டிஸ்க் 100 GB



பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்களில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. 



இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன. 


தற்போது அதிக பட்சமாக, ஒரு புளு ரே டிஸ்க்கில், ஒரு லேயருக்கு 25ஜிபி டேட்டா பதியப்பட்டு, இரண்டு லேயர் புளு ரே சிடியில் 50 ஜிபி டேட்டா கொள்ளளவு இருக்கும்படி கிடைக்கின்றன. இவற்றை இயக்கவும் தனி வகை புளு ரே சிடி ட்ரைவ்கள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன்.

அண்மையில் ஜப்பானில் இதில் ஒரு பெரிய அளவிலான மேம்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஷார்ப் மற்றும் டி.டி.கே நிறுவனங்கள், 100 ஜிபி கொள்ளளவுடன் புளு ரே டிஸ்க்குகளைத் தயாரித்து வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளன. ஜூலை முடிவில் ஷார்ப் நிறுவனமும், செப்டம்பர் மாதத்தில் டி.டி.கே. நிறுவனமும் இவற்றைக் கொண்டு வருகின்றன.

இந்த புளுரே சிடி பி.டி.எக்ஸ்.எல் (BDXL) வரையறை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லேயரில் 33.4 ஜிபி டேட்டா அமைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு சிடியில் நான்கு லேயர்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 100 ஜிபி டேட்டாவினைப் பதிய முடிகிறது. 


பி.டி.எக்ஸ்.எல். சிடி ப்ளேயர்களில், பழைய சிடிக்களையும் இயக்க முடியும். ஆனால் பழைய சிடி பிளேயர்களில், இந்த சிடியினை இயக்க முடியாது. 
இந்த வகை 100 ஜிபி புளு ரே சிடிக்களும், அதற்கான பிளேயரும் தற்போதைக்கு ஜப்பானில் மட்டுமே கிடைக்கும்


Post Comment


6 comments:

http://rkguru.blogspot.com/ said...

Good post.....congrats

டிலீப் said...

நன்றி குரு

Unknown said...

ப்ளாஷ் ட்ரைவிலே 256 GB க்கு மேல் இப்போதெல்லாம் வருகிறதே! ப்ளாஷ் ட்ரைவ்களை விட இதில் என்ன வசதி கூடுதலாக உள்ளது? டிஸ்க் என்றாலே ஸ்க்ராட்ச் ஆகும் வாய்ப்பு வேறு அதிகரிக்குதே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு..

பொன் மாலை பொழுது said...

நல்ல தகவல்கள்.நன்றி

டிலீப் said...

நன்றி குரு,வெறும்பய,மாணிக்கம்

அசோக் :
நீங்கள் சொல்வது பென் ட்ரைவ்
புளு ரே என்பது டிவிடிக்கு பிறகு வந்த தொழிநுட்பம்.

பென் ரைவில் இருக்கும் ஒர் படத்தை பிளேயர்களில் போட்டு பார்க்க முடியாது ஏனnனில் பிளேயர்லில் ரிட் பண்ணும் போமர்ட்டிலில் படம்(Film) இருக்காமை.ஆனால் புளு ரே அவ்வாறுயல்ல.
புளுரேயில் 100ஜிபி அளவுக்கு படங்களை ரைட் பண்ண முடியும் அதே போல் மிகதெளிவாகவும் படம் இருக்கும்

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.