உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது.. பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.
நட்பு என்பது, கடல் அலை போல்..
என்றும் ஓயாமல் அலைந்து வரும்






























































