பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 comments:
மேலும் ஒரு அடி பாகிஸ்தானுக்கு பாவம் அவர்கள்
Post a Comment