அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

சச்சின் சதம்


Sachin Tendulkar signals century No. 48

இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன் குவித்து  டிக்ளேர் செய்தது. 
சங்ககரா இரட்டை   சதமும் (219), ஜெயவர்த்தனே (174), பரண விதனா (100) சதமும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய  இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட  நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன் எடுத்து  இருந்தது. ஷேவாக் 64 ரன்னும், தமிழக  வீரர் முரளிவிஜய் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (புதன்கிழமை) 3-வது நாள்  ஆட்டம் நடந்தது. இருவரும்  தொடர்ந்து ஆடினார்கள். 19.3-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.
Sachin Tendulkar forces one through the off side


ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 99 ரன்னில் ஆட்டம் இழந்தார்.ரந்தீவ் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். 101 பந்தில் 15 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார்.

ஷேவாக் தொடர்ந்து 3 சதம் அடித்திருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் 109 ரன்னும், கொல்கத்தா டெஸ்டில் 165 ரன்னும், இலங்கைக்கு எதிராக காலே டெஸ்டில் 109 ரன்னும் எடுத்தார்.
4-வது சதத்தை தொடர்ந்து அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 2-வது இன்னிங்சில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேவாக் ஆட்டம் இழந்த  போது இந்தியாவின் ஸ்கோர் 165 ஆக இருந்தது. அதை தொடர்ந்து முரளிவிஜய் 58 ரன்னிலும், ராகுல் டிராவிட் 3 ரன்னிலும் மெண்டீஸ், ரந்தீவ் பந்தில் `அவுட்' ஆனார்கள்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 2 ரன்னிலும், லட்சுமண் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தெண்டுல்கரும், லட்சுமணும் தொடர்ந்து ஆடினார்கள். 
சிறிது நேரத்தில் லட்சுமணன் 29 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின் களம் வந்த  சுரேஷ் ரெய்னா   நிதானமாக விளையாடி 66 ரன் சேர்த்தார். சச்சின் பொறுப்புடன்  விளையாடி சதம் அடித்தார். 

இது டெஸ்ட் தொடரில் சச்சினுக்கு 48-வது சதம் ஆகும். ரெய்னா 66 ரன்களுடனும் சச்சின் 108 ரன்களுடனும் இருவரும் களத்தில் உள்ளனர். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.


Post Comment


2 comments:

சி. கருணாகரசு said...

சச்சினுக்கு வாழ்த்துக்கள்.... பகிர்வுக்கு நன்றி.

Dileep said...

நன்றி சி. கருணாகரசு

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.