அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


காதலியை கொன்ற கால்பந்து வீரர்  உடலை நாய்க்கு போட்டார்


பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் புரூனோ பெர்னான்டஸ் டிசோசா. இவர் அங்குள்ள பிளமஸ்கோ கால்பந்து கிளப்பில் கோல்கீப்பராக இருந்தார். திருமணமான இவர் எலிசா சாமுடியோ (25) என்ற பெண்ணை காதலித்தார். அவருடன் மறைமுகமாக குடும்பம் நடத்தினார். அதன் விளைவாக சாமுடியோ கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றார்.அக்குழந்தைக்கு புரூனோ பெர்னாண்டஸ்தான் தந்தை என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் புரூனோ குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எலிசா சாமுடியோ திடீரென மாயமானார்.
 
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரை புரூனோ தான் கொலை செய்திருப்பார் என போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் அவரை தான் கொலை செய்யவில்லை என புரூனோ மறுத்து வந்தார்.
 
இந்த நிலையில் போலீசார் புரூனோவின் மனைவி டயானா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது உறவினர் ஒருவர் புரூனோதான் எலிசா சாமுடியோவை கொலை செய்தார் என்று தெரிவித்தார்.
 
மேலும் கொலையை மறைக்க அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு உணவாக போட்டார் என்றும், அதிர்ச்சியுடன் கூறினார். இதைத்தொடர்ந்து புரூனோவை போலீசார் கைது செய்தனர்.
 
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிளமெங்கோ கால்பந்து கிளப்பில் இருந்து புரூனோ “சஸ்பெண்டு” செய்யப்பட்டுள்ளார். இந்த கிளப்பில் இவர் 2006-ம் ஆண்டு முதல் கோல்கீப்பராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் பிளமெங்கோ அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
 
வருகிற 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை இவர் இழக்கும் அபாயம் உள்ளது.Post Comment


1 comments:

rk guru said...

இவன என்ன பண்றது என்ன்றே தெரியல...படுபாவி

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.