அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

நியுட்ரினோ தெரியுமா ? நமக்கு அணு என்றால் ஏதோ கொஞ்சம் தெரியும். அணுகுண்டும் கூட தெரியும். அணு உலை தெரியும். ஆனால் ஒருவருக்கும் நியுட்ரினோ(nutrino ) என்றால்
தெரியாது ??
அதை நினைத்து பயப்படுவதை தவிர!. நேற்றைய துளிர் அறிவியல் திருவிழாவில் நியுட்ரினோ ஆராய்ச்சி விஞ்ஞானிகள், இந்துமதி , மூர்த்தி சொன்ன தகவல்கள் . "இந்த பிரபஞ்சமும், இதிலுள்ள் அனைத்து பொருள்களும் நுண் துகளால் கட்டமைக்கப் பட்டு இருக்கின்றன. 


நாம் அனைவரும் இந்த உலகில்,நியுட்ரினோ கடலில்தான் நீந்திக்கொண்டு இருக்கிறோம். இதனால் எந்த தீங்கும் இல்லை.நியுட்ரினோக்கள் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் துருவி துருவி எல்லா இடங்களிலும் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. பூமியை துளைக்கும் நியுட்ரினோ

சூரியன் போன்ற விண்மீன் களிலிருந்து இவை உற்பத்தி ஆகின்றன. இன்னொரு மிகமிக வியப்பான தகவல். நம் உடல் கூட தன்னிடம் உள்ள பொட்டாசியம் தாதுவிலிருந்து நொடிக்கு பல லட்சம் நியுட்ரினோ க்களை உருவாக்கி அனைத்து திசைகளிலும் செலுத்து கிறதாம் அவை நம் கண்ணுக்குத் தெரியாமலேயே நம் உடலைஊடுருவி செல்லு கிறதாம் .


இவை அணுப் பொருள்களும் அல்ல. .உடலுக்கு தீங்கு விளைவிப்பவையும் அல்ல. 1,000 பூமி உருண்டைகளை நிறுத்தினாலும் கூட, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு, இவற்றால் கடந்து செல்ல முடியுமாம். இவைகளால், பிரபஞ்சத்தின் தோற்ற வரலாற்றை அறியலாம் என சொல்லப் படுகிறது. பூமியின் இயற்கை பேரிடர்களை முன்னதாகவே அறிய வாய்ப்பு உள்ளதாம். நியுட்ரினோ துகள் கணிதவியல் முறைப்படி கண்டறியப் பட்டதாகும் . .

நியுட்ரினோ க ண்டுபிடிக்கும் கண்காணிப்பகம்


தெரியுமா?
நியுட்ரினோ துகள். நிறை அற்றது. இதில் 3 வகைகள் உண்டு. 1956 ல் தான் ஹாரிசான், குரூஸ் , மேக்கொயர் போன்றோர் இதனை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். இவைகள் சூரியன் போன்ற விண்மீன் களிலிருந்து பூமி நோக்கி வருகின்றன. நம் உடலைஒரு nodiyil சுமார், 50௦ ட்ரில்லியன்( 1 க்கு பின் 12 பூஜ்ஜியங்கள் போட்டால்தான் ஒரு ட்ரில்லியன் ஆகும்). நியுட்ரினோ க்கள் துளைத்து செல்லுகின்றன. எவ்வளவு வேகத்தில் தெரியுமா, கிட்டத்தட்ட ஒளி வேகத்தில்தான். அது எவ்வளவுப்பா . நொடிக்கு 3 லட்சம் கி.மீ.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.