பாலூட்டி இனத்தை சேர்ந்த அழிந்து போய் விட்டதாக உலகம் முழுவதிலும் கருதப்பட்டுக் கொண்டிருக்கும் அரிய வகை " ஹோர்டன் ப்லைன்ஸ் ஸ்லேன்டர் லோரிஸ் என்ற விலங்கினம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது என்ற செய்தியை பிரித்தானியாவை சேர்ந்த கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த விலங்கினம் இலங்கையில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வருடங்களுக்கும் முன்னதாகவே இந்த இனம் அழிந்து விட்டதாகவே இதுவரை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கருதினர். உலகத்திலேயே முதன்முறையாக தற்போது தான் இந்த விலங்கினத்தின் புகைப்படம் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.
எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது லண்டன் விலங்கியல் சமுதாயமும் இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து 120 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகளை மேற்கொண்டனர். அப்போது தான் இந்த அரிய வகை விலங்கினம் சிறிலங்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் சுமார் 12 க்கும் மேற்பட்ட வனப் பகுதிகளில் இந்த இனம் கண்டறியப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதிலேயே இந்த இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. லோரிஸ் எனப்படும் இந்த அரிய வகை விலங்கினம் அச்சுறுத்தக்கூடிய விலங்கினங்களில் ஒன்று என்பதாலும் இது பல வருடங்களுக்கு முன்பே அழிந்து விட்ட விலங்கினமாக கருதப்பட்டுக் கொண்டிருப்பதாலும் இது குறித்த வேறு எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் பிரித்தானிய விலங்கின ஆராய்ச்சியாளர்கள்.
நன்றி tamilcnn
0 comments:
Post a Comment