உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை ஜெர்மனியில் உள்ள ஆக்டோபஸ் துல்லியமாக கணித்தது. இதனால் ஆக்டோ பஸ்சுக்கு உலகம் முழுவதும் “திடீர்” மவுசு ஏற்பட்டது.
ஜெர்மனி ஆக்டோபஸ் மூலம் மேலும் பல்வேறு கணிப்புகளை நடத்தலாம் என்று முயற்சி நடந்தது. ஆனால் அந்த ஆக்டோபஸ் இனி கணிப்பு எதையும் நடத்தாது அதற்கு ஒய்வு அளிக்கப்படுகிறது என்று அறிவித்து விட்டனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வளர்க்கப்படும் ஆக்டோபஸ் ஒன்றை இது போன்ற கணிப்புக்கு பயன் படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 21-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் யார் பிரதமராக வருவார் என்பதை ஆக்டோ பஸ் மூலம் கணித்து உள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளுங் கட்சியான தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியான லிபரல் கட்சியும் போட்டியிடுகின்றன. இதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் இப்போதைய பெண் பிரதமர் ஜுலியா கில்லர்டு மீண்டும் பிரதமர் ஆவார். லிபரல் கட்சி வெற்றி பெற்றால் டோனி அபாட் பிரதமர் ஆவார்.
இவர்களில் யாருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றி சிட்னி ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆக்டோ பஸ் மூலம் கணிப்பு நடத்தினார்கள்.
ஆக்டோபஸ் தொட்டிக்குள் ஜுலியா கில்லர்டு, டோனி அபாட் இருவர் படத்தையும் வைத்தனர். ஆக்டோபஸ் மெல்ல ஊர்ந்து வந்து தனது கைகளால் ஜூலியா கில்லர்டு படத்தை தொட்டு விட்டு அங்கேயே படுத்து கொண்டது.
எனவே ஜுலியா கில்லர்டு தான் வெற்றி பெறுவார் என்று ஆக்டோபஸ் கணித்து இருப்பதாக சொல்கின்றனர்.
ஜெர்மனி ஆக்டோபஸ் போல இந்த ஆக்டோபசின் கணிப்பும் வெற்றி பெறுமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் சொல்ல முடியும்.
இந்த ஆக்டோபஸ்சின் பெயர் கசன்டரா. இதை தட்பவெப்பநிலை தொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்த உள்ளனர்.
0 comments:
Post a Comment