ஆக்டோபஸ் பற்றிதான் கால்பந்து ரசிகர்கள் தற்போது அதிகம் பேசுகிறார் கள். ஜெர்மனியின் ஓபர் ஹாசெனில் கடல் வாழ் உயிரினங்கள் அருங்காட்சிய கத்தில் ஆக்டோபஸ் உள்ளது.
தண்ணீருக்குள் இரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியை வைத்து அதற்குள் மோதும் இரு அணிகளின் தேசிய கொடியையும் தனித்தனியாக வைத்து விடுகின்றனர். தொட்டிக்குள் ஆக்டோபசுக்கு பிடித்தமான உணவும் போடப்படுகிறது.
அதன் பிறகு ஆக்டோபஸ் வரவழைக்கப்படுகிறது. நீந்தி கொண்டு இரு கண்ணாடி தொட்டிகளையும் வலம் வரும் ஆக்டோபஸ் கடைசியில் எந்த தொட்டியின் மீது தனது உடலை பரப்பி பற்றிக்கொண்டு இருக்கிறதோ அந்த தொட்டியில் உள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.
ஜெர்மனி அணி ஆடிய 6 ஆட்டத்தின் முடிவும் இப்படி கணிக்கப்பட்டது. இது அனைத்தும் சரியாக இருந்ததால் ஆக்டோபஸ் ஜோதிட கணிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு கூடியது.
ஜெர்மனி அணி அரை இறுதியில் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் கோபம் அடைந்து ஜோதிடம் சொல்லும் ஆக்டோபசை வறுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பிரபலமாகி உள்ள 2 வயதான பால் என்ற இந்த ஆக்டோபஸ் அடுத்து இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்குமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு ஜெர்மனி-உருகுவே மோதும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தை கணித்து சொல்ல இருக்கிறது.
இதனால் இறுதிப் போட்டி குறித்து கணிப்பு நடத்தப்படுமா? என்று உறுதியாக தெரிய வில்லை. அதே நேரத்தில் இறுதிப் போட்டி கணிப்பு இன்று இருக்கும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஆக்டோபஸ் தனது வழக்கமான பணிகளை செய்து விட்டு இயல்பாக இருந்தால் மட்டுமே சரியாக கணிக்கும். எனவே அது களைப்புடன் இருந்தால் அதற்கு தொந்தரவு கொடுக்க மாட்டோம் என்று அருங்காட்சியக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment