இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் சங்ககரா, பரனவிதனா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் இன்று துவங்கியது. "டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தில்ஷன், பரனவிதனா சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த போது அபிமன்யூ மிதுன் வேகத்தில், தில்ஷன் (25) அவுட்டானார். பின்னர் இணைந்த கேப்டன் சங்ககரா, பரனவிதனா ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககரா, டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடித்தார். இவர் 103 ரன்கள் எடுத்த நிலையில், சேவக் சுழலில் சிக்கினார்.
0 comments:
Post a Comment