அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற  அக்டோபஸ்கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.


தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது.

அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது.

தொடர்ந்து ஜேர்மன் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கிடையே அரை இறுதி போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெறுமென்று கணித்தது.நடந்தது என்னவென்று எம் அனைவருக்கும் தெரியும்
.எனவே இன்று நடைபெற்ற அக்டோபஸ் கணிப்பின்படி,பைனல் போட்டியில் விளையாட உள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டு கொடிகள் அடங்கிய கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில், ஸ்பெயின் கொடி வரையப்பட்ட பெட்டியில் உள்ள சிப்பியை எடுத்தது ஆக்டோபஸ். இன்று நடக்க உள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஜெர்மனி கொடி வரையப்பட்ட பெட்டியில் இருந்த சிப்பியை எடுத்து, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது ஆக்டோபஸ். .


கிளி என்ன சொல்லுது?
ஆக்டோபசைப் போல சிங்கப்பூரில் உள்ள மணி என்ற கிளியும், உலககோப்பை போட்டிகளின் முடிவை முன்கூட்டியே கணித்து வருகிறதாம். உலககோப்பை தொடரின் 4 காலிறுதிப் போட்டி மற்றும் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டிகளின் முடிவை இந்தக் கிளி சரியாக கணித்துள்ளது. பைனலில் நெதர்லாந்துக்கு வெற்றி கிடைக்கும் என இந்தக் கிளி கணித்துள்ளது. அக்டோபஸ்  ??  கிளி ?? Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.