அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtubeசிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள். எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். 


இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரிhttp://www.goodtutorials.com/ இந்த செய்தியை எழுதும் போது இந்த தளத்தில் 25,049 டுடோரியல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max   என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. 


நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது. இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். 


எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. 


நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.