அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

சச்சின் இரட்டை சதம்


Sachin Tendulkar reached his fifth double-century in Tests

இந்தியா - இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட்  போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு  642 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. சங்ககரா 219 ரன்னும், ஜெயவர்த்தனே  174 ரன்னும், பரணவிதனா 100 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை  விளையாடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 382 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 99 ரன்னில் `அவுட்' ஆனார்.தெண்டுல்கர் 108 ரன்னும், ரெய்னா 77 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (வியாழக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

பாலோஆனை தவிர்க்க மேலும் 61 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரெய்னா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பவுண்டரி அடித்து அவர் 100 ரன்னை (192 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) தொட்டார்.

Kumar Sangakkara and Sachin Tendulkar applaud Suresh Raina's century on debut

ரெய்னா தனது முதல் டெஸ்டிலேயே செஞ்சூரி அடித்தார். மறுமுனையில் இருந்த தெண்டுல்கரும் அபாரமாக ஆடினார். இருவரது ஆட்டத்தால் இந்தியா பாலோஆனை தவிர்த்தது.

தெண்டுல்கர் மிகவும் சிறப்பாக விளையாடி 150 ரன்னை தொட்டார். 261 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 477 ரன் 
எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 152 
, ரெய்னா 112 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ரெய்னா 120 ரன் எடுத்திருந்தபோது மெண்டீஸ் பந்தில் அவுட் ஆனார். 228 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். 
அடுத்து களம் இறங்கிய டோனி அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். சிறிது நேரத்தில் டோனி 50 ரன்னை தொட்டார். மறுமுனையில் பேட் செய்த தெண்டுல்கர் பொறுப்புடன் விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 589 ரன் தொட்டது.
 
Sachin Tendulkar avoids a bouncer

இரட்டை சதம் அடித்த சிறிதுநேரத்தில்  தெண்டுல்கர் ஜெயவர்த்னேவிடம் கேட்ச் கொடுத்து  அவுட் ஆனார்.  தெண்டுல்கர்  வெளியேறிய சிறிது நேரத்தில் டோனி 76 ரன் எடுத்து பெவுலியன் திரும்பினார். அடுத்த வந்த ஹர்பஜன்சிங் இலங்கை பந்து வீச்சை சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்க முடியால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து களம் வந்த அபிமன்யூ மிதுன் தொடக்க முதலிலேயே நிதானமாக விளையாடி ஒவ்வொரு ரன்னாக சேர்த்தார் மெண்டீஸ் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் அவர் 41 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இஷாந்த் சர்மாவும் 10 ரன்னுடனும் 
ஓஜா ரன் எதுவும் எடுக்காமலும் இருவரும் களத்தில் உள்ளனர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 669 ரன் எடுத்துள்ளது.


Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.