அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube

ரூ.140 கோடி யாருக்கு ?உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், தென் ஆப்ரிக்காவில் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன்  நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
உலக முழுவதும் 215 நாடுகளில் 260 கோடிக்கும் அதிகமானோர் இறுதி போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசிப்பார்கள்.  கடந்த மாதம்  11ம் தேதி, 19வது உலக கோப்பை போட்டி தென் ஆப்ரிக்காவில் கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த  தொடரில் 2006ல் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி, 2வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்து  வெளியேறின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், அர்ஜென்டினா அணிகளும் கால் இறுதியில் பரிதாபமாக தோற்றன.


அரை இறுதியில் தோற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் 3வது இடத்துக்கு மோதின. இந்நிலையில், இன்று நள்ளிரவு தொடங்கும் பரபரப்பான  இறுதிப் போட்டியில் நெதர்லாந்து & ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால்,  புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது.
 
சாம்பியனுக்கு ரூ.140 கோடி:
 உலக கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக ரூ.140 கோடி வழங்கப்பட உள்ளது. 2வது இடம்  பிடிக்கும் அணிக்கு ரூ.111 கோடி கிடைக்கும். அரை இறுதியில் தோல்வியடைந்த 2 அணிகளுக்கு தலா ரூ.92 கோடி, கால் இறுதியில் தோற்ற 4  அணிகளுக்கு தலா ரூ. 36.8 கோடி, இது தவிர லீக் சுற்றில் பங்கேற்ற எல்லா அணிகளுக்கும் பரிசுத்தொகை என இந்த உலக கோப்பையில் மொத்தம் ரூ.2000 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. 


ஜோகன்னஸ்பர்க் சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்பாக, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நடக்கவுள்ளது. நிறைவு விழா மற்றும் இறுதிப் போட்டியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


slot0
ஸ்பெயின் பலம்: 
ஸ்பெயின் அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 1-0 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதற்கு பின் மகத்தான எழுச்சி கண்டது. சிலி போர்ச்சுகல் போன்ற வலிமைமிக்க அணிகளை வரிசையாக வென்றது. அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி, பைனலுக்குள் அதிரடியாக நுழைந்தது. பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெரும்பாலான நேரம் வைத்திருப்பது, சரியான வீரருக்கு சரியான திசையில் "பாஸ்' செய்வது போன்றவை ஸ்பெயின் அணியின் பலம். அலோன்சா, செர்ஜியோ பஸ்கட்ஸ், ஆண்ட்ரஸ் இனியாஸ்டா, சேவி ஆகியோர் மத்திய களத்தில் பம்பரமாக சுழன்று ஆடுகின்றனர். இவர்கள், எதிரணியை மடக்கி முன்கள வீரரான டேவிட் வில்லாவுக்கு பந்தை கொடுக்கின்றனர். 

அவர், மிக துல்லியமாக கோல் அடித்து, அசத்தல் வெற்றி தேடி தருகிறார். ஸ்பெயின் இதுவரை 7 கோல் அடித்துள்ளது. இதில் டேவிட் வில்லா மட்டும் 5 கோல் அடித்துள்ளார் என்றால், அவரது திறமை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. கார்லஸ் புயால், ஜெரார்டு பிக் போன்றோர் தற்காப்பு பகுதியில் அரணாக செயல்படுகின்றனர். இதில் புயால் கோல் அடிப்பதிலும் கெட்டிக்காரர். ஜெர்மனிக்கு எதிராக, இவர் தலையால் முட்டி அடித்த கோலை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 

மீண்டும் ஒரு முறை டேவிட் வில்லா கைகொடுத்தால், "ஆக்டோபஸ்' கணித்துள்ளது போல் ஸ்பெயின் அணி முதல் முறையாக கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.இது குறித்து டேவிட் வில்லா கூறுகையில்,""இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளோம். எங்களது வெற்றிநடை நெதர்லாந்துக்கு எதிராகவும் தொடரும். உலக கோப்பை வெல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது,''என்றார்.


நெதர்லாந்து வெற்றிநடை: 
நெதர்லாந்து அணியின் வெற்றியை இம்முறை எந்த ஒரு அணியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரையிறுதியில் உருகுவேயை வீழ்த்தி, நூறு சதவீத வெற்றியுடன் பைனலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. டிர்க் குயிட், அர்ஜன் ராபன், ராபின் வான் பெர்சி, ஸனைடர் ஆகியோரது அசத்தல் ஆட்டம் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக உள்ளது. இவர்களை சமாளிப்பது ஸ்பெயின் அணிக்கு இம்முறை பெரும் சவாலாக இருக்கும். இதுவரை நெதர்லாந்து 12 கோல் அடித்துள்ளது. இதில் ஸ்னைடர் மட்டும் 5 கோல் அடித்து, திறமை நிரூபித்துள்ளார்.

Van Persie: Spain are favouritesஸ்பெயின் அணிக்கு எதிராக முதலில் கோல் அடிக்க நெதர்லாந்து முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஸ்பெயின் மிகவும் சிரமப்படும். இந்த பலவீனத்தை நெதர்லாந்து வீரர்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். பைனல் குறித்து நெதர்லாந்து பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விஜிக் கூறுகையில்,""ஸ்பெயின் அணியின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நாங்கள் சில நேரங்களில் கோல் வாய்ப்பை வீணாக்கி விடுகிறோம். இந்த தவறை பைனலில் சரி செய்வோம்,''என்றார்.


கேசில்லாஸ் அசத்தல்: 
போட்டி கூடுதல் நேரத்தை கடந்து "பெனால்டி ஷூட்' அவுட் முறைக்கு சென்றால் ஸ்பெயின் அணிக்கு வாய்ப்பு அதிகம். இந்த அணியின் கேப்டனும் கீப்பருமான இகார் கேசிலாஸ் 3வது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறார். அனுபவம் வாய்ந்த இவர், இது வரை 2 கோல்களை மட்டும் கோட்டை விட்டுள்ளார். 12 முறை எதிரணியின் வாய்ப்புகளை அருமையாக தடுத்துள்ளார். நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டெகிலன்பர்க்கை சாதாரணமாக எடை போட முடியாது. பிரேசில் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். ஆனால், 5 கோல் வாய்ப்புகளை தடுக்க தவறியுள்ளார். 


ஆப்ரிக்க கண்டத்தில் நடக்கும் முதல் உலக கோப்பை தொடரில், முதல் சாம்பியன் பட்டம் வெல்வது ஸ்பெயினா அல்லது நெதர்லாந்து அணியா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.


Netherlands-Spain preview

மூன்றாவது முறை
சர்வதேச கால்பந்து ரேங்கிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக உலக கோப்பை பைனலில் விளையாட உள்ளது. கடந்த 1974(எதிர், ஜெர்மனி), 78(எதிர், அர்ஜென்டினா)ல் வாய்ப்பை வீணாக்கியது. இம்முறை 32 ஆண்டுகளுக்குப் பின் பைனலில் சாதிக்க காத்திருக்கிறது.
* நெதர்லாந்து அணி கடைசியாக பங்கேற்ற 25 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இன்றும் வெற்றி தொடரும் பட்சத்தில், கோப்பை கைப்பற்றலாம்.


"நம்பர்-2' அணி
கால்பந்து அரங்கின் மிகப் பிரபலமான ரியல் மாட்ரிட், பார்சிலோனா போன்ற கிளப் அணிகள் ஸ்பெயினில் தான் உள்ளன. உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின் கடந்த 2008ல் "யூரோ' கோப்பை வென்றது. உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1950ல் நான்காவது இடம் பெற்றதே இந்த அணியின் சிறந்த செயல்பாடு. 


இவர்களை கவனியுங்கள்...
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் உலககோப்பை கால்பந்து பைனல் போட்டியில், இன்று ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் அசத்த காத்திருக்கும் வீரர்கள் பற்றி இங்கு பார்ப்போம்...

டேவிட் வில்லா (ஸ்பெயின்)

WorldCup001

முதல் முறையாக ஸ்பெயின் அணி உலககோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியிருப்பதில், நட்சத்திர வீரர் டேவிட் வில்லாவுக்கு முக்கிய பங்குண்டு. இத்தொடர் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிக்கு வித்திட்டார். லீக் சுற்றில் சிலி, ரவுண்டர் ஆப் 16 சுற்றில் போர்ச்சுகல், காலிறுதியில் பராகுவே அணிகளை வீழ்த்த டேவிட் வில்லாவின் அபார ஆட்டம் காரணமாக அமைந்தது. இத்தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இன்றைய இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு, வில்லா, வில்லனாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 


பெட்ரோ (ஸ்பெயின்)
ஸ்பெயின் அணியின் மற்றொரு முன் கள வீரர் பெட்ரோ. பார்ம் இன்றி தவித்து வரும் டோரசுக்குப் பதில், மாற்று வீரராக களமிறங்கியுள்ள இவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துடிப்புடன் ஆடக் கூடிய இவரிடமிருந்து எதிரணி வீரர்கள் பந்தை கைப்பற்றுவது மிகவும் சிரமம். மின்னல் வேகத்தில் பந்தை "பாஸ்' செய்வதில் கில்லாடியான இவர், இன்றைய போட்டியில் ஸ்பெயின் வெற்றிக்கு ஒத்துழைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இனியஸ்டா (ஸ்பெயின்)
சிறந்த நடுக்கள வீரரான இனியஸ்டா, தற்காப்பு ஆட்டத்தில் கைதேர்ந்தவர். இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். துல்லியமாக பந்தை "பாஸ்' செய்யக் கூடியவர். எதிரணி வீரர்களின் வியூகத்தை நொடிப் பொழுதில் தகர்த்தெறியும் இவர், நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஸ்பெயினுக்கு கைகொடுப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

CUP002

ஸ்னைடர் (நெதர்லாந்து)தென் ஆப்ரிக்கா உலககோப்பை தொடரில் நெதர்லாந்து தரப்பில் முன்னணி வீரராக அசத்தி வருகிறார் ஸ்னைடர். காலிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்து அசத்திய இவர், நெதர்லாந்தின் வெற்றியை உறுதி செய்தார். இத்தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். சிறந்த நடுக்கள வீரரான இவர், வெகு தூரத்திலிருந்து துல்லியமாக கோல் அடிப்பதில் வல்லவர். இந்த முறை நெதர்லாந்தின் கோப்பை கனவை நனவாக்க காத்திருக்கிறார் ஸ்னைடர். 
ராபன் (நெதர்லாந்து)
நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் அர்ஜென் ராபன். உருகுவே அணிக்கு எதிரான அரையிறுதியில் தலையால் முட்டி இவர் அடித்த சூப்பர் கோல், நெதர்லாந்து அணி பைனலுக்கு முன்னேற வழிவகுத்தது. முன்களத்தில் மின்னல் வேகத்தில் செயல்படும் இவருக்கு முன், ஸ்பெயின் வீரர்களுக்கு தாக்குப்பிடிப்பது கடினம் தான். 

புரோன்கார்ஸ்ட் (நெதர்லாந்து)
நெதர்லாந்து அணியின் கேப்டனான இவர், திறமையாக செயல்பட்டு வருகிறார். தற்காப்பு பகுதியில் நெதர்லாந்து அணிக்கு பக்கபலமாக விளையாடி வருகிறார். உருகுவே அணிக்கு எதிராக 90 அடி தூரத்திலிருந்து சூப்பர் கோல் அடித்து மிரட்டினார். "கார்னர் கிக்', "பிரீ கிக்' அடிப்பதில், கைதேர்ந்தவர். நெதர்லாந்து அணிக்கு, முதல் முறையாக உலககோப்பை பெற்றுத் தருவதில், உறுதியாக இருக்கிறார் புரோன்கார்ஸ்ட். 


ஆக்டோபசுக்கு ஆபத்து: 
இந்த உலக கோப்பை போட்டியின்போது ஜெர்மனி மீன் அருங்காட்சியகத்தில் உள்ள பால் என்ற 2 வயது ஆக்டோபஸ், ஜெர்மனி விளையாடிய ஆட்டங்களின் முடிவுகளை முன் கூட்டியே சரியாகக் கணித்து கூறியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


அரை இறுதியில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோற்கும் என்று அந்த ஆக்டோபஸ் கணித்தபடியே முடிவு அமைந்ததால், ஜெர்மனி ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.


ஜெர்மனிக்கு எதிராக கணிப்பு கூறிய ஆக்டோபசைக் கொல்ல வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் கூறியுள்ளதால், அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ஆக்டோபஸ் கணித்துள்ளது. 
இதே போல சிங்கப்பூரை சேர்ந்த மணி என்ற கிளி, பைனலில் நெதர்லாந்து அணி வெற்றி பெறும் என்று  ஆரூடம் கூறியுள்ளதால் இந்த போட்டியின் முடிவை அறிய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.