இதோ இன்னுமொரு உம்மை சம்பவம்
பெண்களை வசியம் செய்வதற்காகவும், தொழில் அபிவிருத்து செய்து தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டி மதுரையில் கைதான போலி மந்திரவாதி குறித்து மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் பக்தர்களுக்கு கொடுக்கும் உருண்டையில் தனது விந்தணு, சிறுநீர், எச்சிலை கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ஒய்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் ராமன் (38). இவர் இப்பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னரே குடி வந்தார். தன்னை மந்திரவாதி என இப்பகுதி மக்களிடம் கூறிக் கொண்ட இவர் பெண் களை வசியம் செய்யவும், தொழில் அபிவிருத்திக்கும் மந்திர உருண்டை, தாயத்து போன்றவற்றை வழங்கி வந்தார்.
இதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வரும் செல்வகணேஷ் (32) என்பவர் தொழில் அபிவிருத்திக்காக இவரை அணு கினார். இதற்காக ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொண்டு மந்திரித்த உருண்டையை கொடுத் தார். ஆனால் தொழிலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து செல்வகணேஷ், ராமனிடம் கேட் டபோது நான் சொல்லிய கிழமையில் செய்யாததால் மந்திரம் பலிக்கவில்லை என்று கூறினார். இதுகுறித்து செல்வகணேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தொழில் அபிவிருத்திக்காகவும், பெண்களை வசியம் செய்து தருவதாகவும் கூறி 500க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கி ராமன் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. தன்னிடம் வருவோரிடம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கறந்துள்ளார்.
காரியம் நிறைவேறவில்லை என்றால் நான் கூறிய கிழமையில் செய்யவில்லை, குளித்திருக்க மாட்டாய் என ஏதாவது காரணத்தை கூறி சமா ளித்து விடுவார். மீண்டும் பலிக்க வேண்டும் என்றால் மேலும் பணம் வேண்டும் என்று கேட்பார். மேலும் இவர் ‘பக்தர்களுக்கு’ வழங் கும் உரு ண்டை மற்றும் தாயத்தில் தனது விந்தணு, எச்சில், சிறுநீர் போன்றவற்றை தடவி கொடுத்துள்ளார். இவ்வாறு வழங்குவதன் மூலமே தனது மந்தி ரம் பலிக்கும் என்றும் பகிரங் கமாக தெரிவித்துள்ளார்.
இவரிடம் ஏமாந்த அனைவரும் இதுகுறித்து வெளியே சொல்ல வெட்கப்பட்டு இருந்து விடுவர். ஏதாவது ஒரு சிலருக்கு காரியம் பலிக்கும். அவர்க ள் இவரது தீவிர பக்தர்களாக மாறி மேலும், மேலும் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவர் தனக்கு கீழே சிலரை ஏஜென்ட்களாக நியமித்திருந்தார். இவர்கள் பொதுமக்களிடம் ராமன் பெரிய மந்திரவாதி என பிரசாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களை அணுகி, ராமனி டம் அழைத்து வருவர். பில்லி சூன்யம் மூலம் பிரச் னையை தீர்த்துக் வைப்ப தாக கூறி உருண்டை, தாயத்தைக் கொடுத்து பணம் பறித்து விடுவார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘ராமன் தன்னை பெரிய மந்திரவாதி என்பதைப் போல் மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதற்காக மாதத்தில் 20 நாட்கள் கேரளாவுக்கு சென்று விடுவார். அங்கேயே தாயத்து, உருண்டைகளை தயாரித்துக் கொண்டு வருவார். 10 நாட்கள் மட்டுமே இங்கு தங்குவார். இந்த நாட்களில் லட்சக்கணக்கில் பணம் பார்த்து விடுவார். இவரிடம் ஏமாந்தவர்கள் தைரியமாக வந்து புகார் கூறினால் ராமன் மீது மேலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
தாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்களை என்ன பண்ணுவது??
மூடநம்பிக்கை எப்போ மக்கள் மத்தியிலிருந்து ஒழியிதோ அப்போ தான் தாங்கள் கடவுளின் அவதாரம் என்பவர்களின் தொல்லை குறையும்.
0 comments:
Post a Comment