வேர்ட்பேடில் ஓப்பன் ஆபீஸ் டெக்ஸ்ட்:
தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 2007 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் வேர்ட்பேட் தொகுப்பில், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான, பைல்களைத் திறக்கவும், எடிட் செய்திடவும் முடியும். டாகுமென்ட் ஒன்றை உருவாக்கி, அதனை சேவ் செய்திடுகையில், பைல் பெயருக்கு அடுத்தபடியாக இருக்கும், கீழ்விரி மெனுவினைப் பார்க்கவும்.
இதில் பல பார்மட்கள் தரப்படுகின்றன. இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டில், டாகுமெண்ட்டினை சேவ் செய்திடலாம். ஓப்பன் ஆபீஸ் தொகுப்பின் பார்மட்டில் சேவ் செய்திட.odt என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான பார்மட்.docx என்பதாகும். இவ்வகையில் மட்டுமின்றி மேலும் பல வழிகளில் வேர்ட்பேட் 2007 மேம்படுத்தப்பட்டதாகக் கிடைக்கிறது.
டெக்ஸ்ட்டில் தனி அமைப்பு:
வேர்டில் தயாரிக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில் சில தொகுதிகளில் அடங்கியுள்ள செய்திகளை மற்றவற்றிலிருந்து பிரித்துக் காட்ட வேர்ட் பல வழிகளைத் தருகிறது. அவற்றைக் காணலாம்.
டாகுமெண்ட் ஒன்றில் பலவகையான தகவல்கள் ஆங்காங்கே சீராகத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடுகிறீர்கள். அப்படிப்பட்ட பிரிவினை முதலில் தேர்ந்தெடுக்கவும். அதனை அப்படியே தனியாக செலக்ட் செய்திடவும். அதாவது மவுஸின் கர்சரை வைத்து அப்பகுதியின் முதலிலிருந்து இறுதி வரை இழுத்து தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது மெனுவில் Formatபிரிவில் கிளிக் செய்து அதில் கிடைக்கும் பிரிவுகளில் Borders and Shadingஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் விண்டோவில் Borders டேபில் உங்களுக்குப் பிடித்த பார்டரினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பலவகையான பார்டர்கள் இருக்கும். பொறுமையாக அனைத்தையும் ஒரு முறை பார்த்து தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கும்போதே அது எப்படி அமையும் என்று காட்டப்படும். இந்த கட்டத்திற்கு ஷேட் மற்றும் கலர் அமைக்கலாம்.
இதற்கு Shading என்பதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Color மற்றும் Pattern ஆகிய பிரிவுகள் இருக்கும். தேவையான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். அதே போல ஷேடிங் இருக்க வேண்டும் என்றால் பகுதியில் தேவையான அளவு ஷேடிங் பிரிவினைத் தேர்ந்தெடுக்கலாம். பின் ஓகே கொடுத்து கிளிக் செய்தால் டாகுமெண்ட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவு தனியாகக் கட்டம் கட்டப்பட்டு வண்ணம் மற்றும் ஷேட் கொடுக்கப்பட்டு மற்றவற்றிலிருந்து தனியாகத் தோற்றம் அளிக்கும்.
முன்பு எடிட் செய்த இடம்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கிறீர்கள். இறுதியாகத் திறந்து எடிட் செய்தபோது எங்கு எடிட் செய்தீர்கள் என்று தெரியவில்லையா? ஷிப்ட் + எப் 5 அழுத்துங்கள். கர்சர் நீங்கள் கடைசியாக எடிட் செய்த இடத்தில் இருக்கும். இனி நிம்மதியாகப் பணியைத் தொடருங்கள்.
வேர்டில் லேபிள் பிரிண்டிங்:
அலுவலகக் கடிதம் ஒன்றை, அங்கு பணி புரியும் ஒவ்வொருவருக்கும் அனுப்ப வேண்டிய சூழ்நிலையில், அனைவரின் பெயர், பதவி, முகவரியினை லேபிளாக அச்சடித்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படும். இதற்கு வேர்ட் ஒரு வழி தருகிறது.
முதலில் Tools மெனுவில் Envelopes and Labels என்ற பிரிவைத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் சப் மெனுவில் Letters and Mailings என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் Labels என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள அட்ரஸ் முகவரியில் தேவையான அட்ரஸை டைப் செய்திடவும்.
கீழாக இரண்டு ஆப்ஷன்ஸ் இருக்கும். அதே முகவரியை முழுப் பக்கத்திலும் அச்சடிக்கFull page of the same labelsஎன்பதையும் ஒரே ஒரு லேபிள் அடிக்க Single label என்பதனையும் தேர்ந்தெடுக்கவும். இனி பிரிண்ட் கொடுத்தால் நீங்கள் விரும்பியபடி லேபிள்கள் கிடைக்கும். இன்னும் வேறு வழிகளில் அச்சடித்து எடுக்க இந்த மெனுவில் வழிகள் உள்ளன. வெவ்வேறு டேப்களில் கிளிக் செய்து முகவரிகளைக் கொடுத்து சோதனை செய்து பார்க்கவும். தொடர்ந்து பல்வேறு முகவரிகளுக்கு அச்சிட வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டிய வசதி மெயில் மெர்ஜ் வசதி ஆகும்.
டேபிளைத் தேர்ந்தெடுக்க:
ஒருடேபிளைத் தேர்ந்தெடுக்க கர்சரை டேபிளின் உள்ளே வைத்து பின் Altகீயை அழுத்திக் கொண்டு numeric keypad–ல் 5 என்ற கீயை அழுத்தவும். இவ்வாறு அழுத்தும்போது Num Lock R அழுத்தப் பட்டிருக்க வேண்டும். மவுஸால் டேபிளை செலக்ட் செய்திட விரும்பினால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு டேபிளில் எங்காவது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும்.
1 comments:
நல்ல பதிவு.........
Post a Comment