Posted by
டிலீப்
On Sunday, July 25, 2010
பிரபல கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியா இவ் வருடம் தனது 2ஆம் காலண்டுக்குரிய நிகர இலாபம் 40% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 227 மில்லியன் யூரோக்களாகும்.
தனது தேறிய விற்பனையானது இவ்வருட ஏப்ரல் மற்றும் ஜூன் மாதகாலப் பகுதியில் 10 பில்லியன் யூரோக்களாக காணப்பட்டதாகவும். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 1% வீதம் அதிகமெனவும் நொக்கியா தெரிவிக்கின்றது.
நொக்கியா இவ் வருடத்தின் 2ஆம் காலாண்டுப் பகுதியில் உலகளாவிய ரீதியில் மொத்தமாக 111.1 மில்லியன் கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8 % வீதம் அதிகமாகும்.
உலக கையடக்கத் தொலைபேசிச் சந்தையில் நொக்கியாவின் பங்கு இவ்வருட 2ஆம் காலாண்டு பகுதியில் 33% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடம் இது 35% வீதமாக காணப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நொக்கியா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பெக்கா கலாஷ்வூ , அப்பிள் நிறுவன 'ஜ போன்' ரக கையடக்க தொலைபேசிகள் சந்தையில் தமக்கு பாரிய போட்டி நிலையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். எனினும் தாம் தமது நிலையில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 'சிம்பியன் 3' இயங்குதளத்தைக் கொண்டு இயங்கவிருக்கும் தமது புதிய 'N8' வகை தொலைபேசியானது பல நவீன வசதிகளை உள்ளடக்கியதென்றும் இக்கையடக்க தொலைபேசியானது இந்த ஆண்டில் 3ஆவது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வருமெனவும் அதன் பின் தாம் பழைய நிலையை அடைய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post Comment
0 comments:
Post a Comment