அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


CUP007

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறி அசத்தியது நெதர்லாந்து அணி. நேற்று நடந்த அரையிறுதியில் உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


தென் ஆப்ரிக்காவில் உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் நேற்று துவங்கின. முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. 

சூப்பர் கோல்: 
ஆட்டத்தின் துவக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாகப் போராடின. ஆட்டத்தின் 18 வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன், புரோன்கார்ஸ்ட் 90 அடி தூரத்திலிருந்து மின்னல் வேகத்தில் சூப்பர் கோலடித்து அசத்தினார். சற்றும் எதிர்பாராத உருகுவே கோல் கீப்பர் மஸ்லரா அதிர்ச்சி அடைந்தார். 21 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனை கீழே தள்ளி முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட உருகுவே வீரர் பெரைரா "எல்லோ கார்டு (Yellow Card)' பெற்றார்.
 
Records mount for Final-bound Dutch


உருகுவே பதிலடி: 
ஆட்டத்தின் 28 வது நிமிடத்தில் பந்தை "கிக்' செய்ய முற்பட்ட உருகுவே வீரர், கேசரஸ், நெதர்லாந்து வீரர் டி ஜீவின் முகத்தை பதம் பார்த்தார். இதனையடுத்து இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். நெதர்லாந்தின் ஸ்னைஜ்டர், உருகுவேயின் கேசரஸ் "எல்லோ கார்டு  (Yellow Card)' பெற்றனர். ஆட்டத்தின் 41 வது நிமிடத்தில், நெதர்லாந்தின் தடைகளை தாண்டி, "பீல்டு' கோலடித்து அசத்தினார் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் போர்லான். இதனையடுத்து முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. 


CUP001ஸ்னைஜ்டர் அபாரம்: 
இரண்டாவது பாதியிலும் நெதர்லாந்து மிரட்டியது. ஆட்டத்தின் 70 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்னைஜ்டர், கோலடித்தார். இதனையடுத்து 73 வது நிமிடத்தில் தலையால் முட்டி ராபன் ஒரு கோலடிக்க, நெதர்லாந்து அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது. கூடுதல் நேரத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோலடிக்க (92 வது நிமிடம்), கடைசி கட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறிது. 

32 ஆண்டுகளுக்குப்பின்: உலககோப்பை அரங்கில் 32 ஆண்டுகளுக்குப் பின் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது நெதர்லாந்து அணி. இதற்கு முன் கடந்த 1978 ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலககோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியிருந்தது நெதர்லாந்து.Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.