அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும், அவரது நீண்ட கால பள்ளித்தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பள்ளித்தோழி சாக்ஷி ராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவ்விழாவில் தோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர்.


சாக்ஷி ராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வு பெற்ற பின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது. இருவருக்கும் இடையே திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும், அநேகமாக ஆஸி., தொடருக்குப்பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.


மகிழ்ச்சி வெள்ளம்: தோனியின் நிச்சயார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்து வரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.


Post Comment


1 comments:

Anonymous said...

i_èii_è

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.