அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

MS Dhoni and Sachin Tendulkar at a practice session

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இலங்கை அணி வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் இன்று துவங்குகிறது.
பலமான பேட்டிங்:
 முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட தவறினர். இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த போட்டியில் சதமடித்து ஆறுதல் அளித்த சேவக் மற்றும் அரைசதமடித்த சச்சின், யுவராஜ், லட்சுமண் உள்ளிட்டோர் தங்களது அபார ஆட்டத்தை தொடர வேண்டும். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் டிராவிட், தோனி உள்ளிட்டோர் பொறுப்புடன் ஆடினால் வலுவான இலக்கை எட்டலாம்.

பலவீனமான பவுலிங்:
ஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இஷாந்த் சர்மா, அபிமன்யு மிதுன் ஆகியோர் விரைவில் விக்கெட் வீழ்த்த வேண்டும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள், கடந்த போட்டியில் திணறினர். இவர்கள் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போட்டியில் அமித் சர்மா, முனாப் படேல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கினால் நல்லது.

சொந்தமண் சாதகம்:
பொதுவாக இலங்கை அணியினர், சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனை காலே டெஸ்டில் காண முடிந்தது. இப்போட்டியில் சதமடித்த பரணவிதனா, கேப்டன் சங்ககரா உள்ளிட்டோர் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு தில்ஷன், மகிலா ஜெயவர்தனா, சமரவீரா, மாத்யூஸ் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம்.

வருகிறார் மெண்டிஸ்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து சுழல் ஜாம்பவான் முரளிதரன் ஓய்வு பெற்றதால், இவரது இடத்துக்கு மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2008ல் இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்டில் 26 விக்கெட் வீழ்த்தி, தொடரை கைப்பற்ற காரணமாக விளங்கினார். இதேபோல காயம் காரணமாக மலிங்காவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதால், பெர்ணான்டோ களமிறங்குகிறார். கடந்த டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய இவர்கள் இல்லாதது, இலங்கை அணிக்கு பின்னடைவான விஷயம்.
இரு அணிகளும் வெற்றியை நோக்கி களமிறங்குவதால், கடந்த போட்டியை போல இந்த டெஸ்ட் போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

இதுவரை...
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் கொழும்பு, எஸ்.எஸ்.சி., மைதானத்தில், இந்தியா-இலங்கை அணிகள் 6 டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. இதில் இலங்கை 2, இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. மூன்று போட்டி "டிரா' ஆனது.


* இங்கு இந்திய அணிக்கு எதிராக, இலங்கை அணி அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கு 610 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இலங்கை அணிக்கு எதிராக, இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 518 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது.


* இங்கு அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (22 டெஸ்ட், 2467 ரன்) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் சச்சின் (4 டெஸ்ட், 495 ரன்) உள்ளார்.


* இங்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முரளிதரன் (24 டெஸ்ட், 166 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இந்தியா சார்பில் அனில் கும்ளே (4 டெஸ்ட், 16 விக்.,) உள்ளார்.


சிக்கலில் "நம்பர்-1'
காலே டெஸ்டில் தோல்வி அடைந்ததன்மூலம், ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில், இந்திய அணியின் "நம்பர்-1' இடத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள, இன்று துவங்கும் 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை தோல்வி அடையும் பட்சத்தில், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கும் 3வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.


ஏனெனில் இத்தொடரை இந்திய அணி 0-3 அல்லது 0-2 என இழக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தை இழந்துவிடும். ஒருவேளை 1-2 என தொடரை இழக்கும் பட்சத்தில், முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.


காம்பிர் சந்தேகம்
 முழங்கால் காயம் காரணமாக, இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர், 2வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே ஜாகிர், ஸ்ரீசாந்த் இல்லாத நிலையில், காம்பிரும் காயமடைந்திருப்பது, இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவர் விளையாடாத பட்சத்தில், சுரேஷ் ரெய்னா களமிறக்கப்படலாம்.

எளிதான காரியமல்ல: தோனி
இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ""முதல் டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய முரளிதரன், மலிங்கா ஆகிய இலங்கை வீரர்கள், 2வது டெஸ்டில் விளையாடவில்லை. இது இந்திய அணிக்கு சாதகமாக அமையாது. ஏனெனில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எளிதாக வீழ்த்த முடியாது. தவிர, தற்போது இலங்கை அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் உள்ளதால், அவர்களது பந்துவீச்சை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்திய அணியின் பவுலிங் சற்று மோசமாக இருந்தபோதிலும், வலுவான பேட்டிங் வரிசை உள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற போராடுவோம்,'' என்றார்.

பவுலிங் கூட்டணி வேண்டும்: சங்ககரா
""இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சுலப வெற்றி பெற, சிறந்த பவுலிங் கூட்டணி வேண்டும்,'' என இலங்கை கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சங்ககரா கூறுகையில், ""முன்னணி பவுலர்களான முரளிதரன், மலிங்கா இல்லாதது ஏமாற்றமான விஷயம். இருப்பினும் அஜந்தா மெண்டிஸ், பெர்ணான்டோ உள்ளிட்டோர் அணிக்கு திரும்புவது நம்பிக்கை அளிக்கிறது. முரளிதரன், மலிங்கா கூட்டணி போன்று சிறந்த பவுலிங் கூட்டணி அமையும் பட்சத்தில், இந்திய அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிவிடலாம்,'' என்றார்.


இந்தியா ஆதிக்கம்
டெஸ்ட் அரங்கில், இந்தியா-இலங்கை அணிகள் 33 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 13, இலங்கை 6 போட்டியில் வெற்றி பெற்றன. 14 போட்டிகள் "டிரா' ஆனது.

சொந்தமண் பலம்
இதுவரை 5 முறை இலங்கை பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒரே ஒரு முறை (1993) மட்டுமே தொடரை வென்றது. இலங்கை அணி மூன்று முறை (1985, 2001, 2008) தொடரை கைப்பற்றியது. ஒரு முறை (1997) தொடர் "டிரா' ஆனது.
17 ஆண்டு ஏக்கம்
இலங்கை மண்ணில், இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று 17 ஆண்டுகள் ஆகிறது. இங்கு கடந்த 1993ல் அசாருதின் தலைமையில் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதற்கு பின் 2001, 08ல் தோல்வி அடைந்தது. 1997ல் "டிரா' செய்தது. தற்போது முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இன்று துவங்கும் 2வது டெஸ்டில் கவனமாக விளையாட வேண்டும். அடுத்து வரும் 2 டெஸ்டிலும் பெறும் பட்சத்தில், இலங்கை மண்ணில் 17 ஆண்டுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம்.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.