இங்கிலாந்தின் சவுத்ஆம்ப்டன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கவுன்சில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 16&74 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண், முதியவர் என 10 ஆண்டுகளில் பலியான 16 லட்சம் பேர் பற்றிய விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவு பற்றி அதன் தலைவர் டாக்டர் டேவிட் கோகன் கூறியதாவது:
உணவு, பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தீர்மானிப்பதில் நமது தொழிலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெயின்டர், கட்டுமான வேலை செய்பவர், வண்டி இழுப்பவர் என உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இறக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட 2 மடங்கு அதிகம். பேஷன் டிசைனர்கள், அழகுக்கலை நிபுணர்கள் போன்றவர்கள் வெளிநபரிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. காரணமாக இவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 9 மடங்கு அதிகம். கப்பலில் வேலை பார்ப்பவர்கள், பார் ஊழியர்கள் போன்றவர்களிடம் மது குடிக்கும் பழக்கம் அதிகமாகி சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு அதிகம். 1991&2000&ம் ஆண்டுகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடந்தது. செக்ஸ் வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவை நமது தொழிலைப் பொருத்தே அமைகின்றன.
இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கம், உணவுப் பழக்கம் ஆகியவற்றில் எந்த அளவு கவனம் செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment