அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube
2010ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. இந்த முறை வர உள்ள சூரிய கிரகணம் கொஞ்சம் வித்தியாசமானது. சுவையானதும் கூட. காரணம் கிரகணப் பாதை, கிட்டத்தட்ட, பாதிக்கு மேல்,கடலின் மேலேயே நகர்ந்து, தென் பசிபிக் பெருங்கடலிலேயே.. சின்ன சின்ன தீவுகளை மட்டுமே முத்தமிட்டு அணைத்துக் கொண்டு போகிறது சூரியன் .


சூரிய கிரகணம் முடியும் தறுவாயில்தான்,மாலை கடலில் முழுகும் முன்தான், தென் அமெரிக்காவின் தென் முனையை , தரைப் பகுதியைத் தொட்டுப் பார்க்கிறது.எனவே சூரிய கிரகணத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், உலகின் தென் முனையான சிலிக்கும், அர்ஜென்டினாவுக்கும் தான் போகவேண்டும்.
நிலம் .. காண ..மறுக்கும் ..கிரகணம்..!


ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கிரகணம், உலகின் அதிசய தீவான ஈஸ்டர் தீவுகளுக்கும் விஜயம் செய்வதுதான். இந்த தீவுகளிலுள்ள சிலைகள்தான் உலக அதிசயம். இந்த தீவு பசுபிக் பெருங்கடலின் கடை கோடியில் அமைந்துள்ளது. தென் அமெரிக்க சிலி நகரிலிருந்து 2 .335 கி.மீ தூரத்திலும். தாகிதி தீவிலிருந்து 3 , 000கி.மீ தொலைவிலும் பசிபிக் பெருங்கடலில் தன்னந்தனியாக பயமின்றி உள்ளது. இத்தீவு. 18 கி.மீ நீளமும், 12 கி.மீ அகலமுமே உள்ளது. இங்கே, 1722 ல். டச்சு கப்பல் மாலுமி ஒருவர் பல டன்கள் எடையும், 30 அடி உயரமும் உள்ள நூற்றுக் கணக்கான சிலைகள் இருப்பதையும் கண்டு பிடித்தார். மனித வாசனையே இல்லாத, உலகின் கடைக்கோடி தீவில் இந்த சிலைகளைக் கொண்டுவந்து வைத்தது, யார். இன்றுவரை விடை காண முடியாத விடுகதை அது. இந்த சிலைகளின் பெயர்" மாவோய்கள்" சிலைகள் அனைத்தும் கடலை நோக்கியே அமைந்துள்ளன. 


சூரியனைவிட.. பெரிய..நிழலான.. சந்திரன்..!

சமீபத்தில்தான் ஒரு சூரிய கிரகணம் 2010 ஜனவரி 15 ல் தமிழக தென் கடற்கரைக்கு வந்து கலக்கியது. , அதுவும் அரிதான வளைய கிரகணம். அது வந்த , ஆறு மாதத்துக்குள்ளேயே இன்னொரு முழு சூரிய கிரகணம். இதுவும் ஒரு சிறப்புத் தகுதி வாய்ந்ததுதான்.ஓர் ஆண்டுக்குள்ளேயே இரண்டு முழு சூரிய கிரகணங்கள்.!இது உலகின் கோடியில் நகர்ந்து போகிறது. நிலத்தையே காண மறுத்து , ஒரு சில குட்டி தீவுகளை மட்டும் பார்க்கிறது.ஈஸ்டர் தீவுகள் தவிர, பிரெஞ்சு பாலிநேசியாவைச் சேர்ந்த சிறு தீவுக்கூட்டமான "டுவோமோட்டு" தீவுகளில் தெரிகிறது. இந்த கிரகணத்தின் முக்கிய அம்சம் ,நிலவின் நிழல் சூரியனைவிட கொஞ்சம் பெரியதாக உள்ளதுதான். நிழலின் 
அளவு, 1 .058.பொதுவாக, சூரிய கிரகணத்தின் 15 நாள் முன்பு/பின்பு சந்திர கிரகணம் வரும். . .

கருப்பு.. சூரியன்..கடலில் .. மறைவு..!.

இந்த சூரிய கிரகணம், ஜூலை 11 ம நாள், சர்வதேச நேரப்படி, 18 .15 .15 (காலை 6 .15 ) க்கு 
நியுசிலாந்துக்கு வடகிழக்காக துவங்குகிறது.கிட்டத்தட்ட சர்வதேச தேதிக்கோடு கடந்து செல்லும் இடத்தில்தான் இது துவங்குகிறது.தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் படகோனியாவில், மாலை 8 .52 .42 க்கு (சர்வ தேச நேரம் 20௦.52 .42 )முடிகிறது.மொத்த கிரகண நேரம் 19 .33 .34 முழு மறைப்பு என்பது 5 நிமிடம், 20 நொடி நிகழ உள்ளது. இந்நிகழ்வு கடலில், மனிதனோ, நிலமோ இல்லாத இடத்தில் நிகழ்வதால், இதனை நாம் காண்பது சிரமம். ஒருக்கால், விமானத்தில் பறந்தால்,பார்க்கலாம். ஆனால் ஈஸ்டர் தீவில் 4 நிமிடம், 39 நொடி மட்டுமே நீடிக்கிறது.. சூரிய கிரகண பாதையின் அகலம் 249 கி.மீ. ஆனால் நிலவின் நிழல், சூரியனை சுமார், 3 ,700௦௦ கி.மீ தூரம் துரத்திச் சென்று கடலில் மூழ்க அடிக்கிறது. .முழு மறைப்பு சரியாக, 18 .15 .15 க்கு துவங்கி, 20௦.51 .42 க்கு முடிகிறது. உச்சபட்ச முழு மறைப்பு 19 .34 .18 க்கு நடக்கிறது.இந்த முழு சூரிய கிரகணத்தில் முழு மறைப்பு என்பது மாலை நேரத்தில் நிகழ்வதால், இங்கே சூரியன் 40௦ டிகிரி உயரத்தில் தெரியும். பகுதி கிரகணம் பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் அமெரிக்காவின் தென் பகுதிகளில் தெரியும்.

சிலியில் கிரகணம் தெரியும் இடங்கள்.. முழு மறைப்பு நேரம்..2.நிமிடம், 46 நொடி


இந்த சூரிய கிரகணத்திலுள்ள சிறப்பு என்னவெனில் ,சிலி, அர்ஜென்டினாவில் முழு சூரியனும் மறைந்து, கருப்பு சூரியானாக காட்சி அளிக்கும் இங்கே சூரியன் ."கருப்பு சூரியனாக" தன் முகத்தை, 2 .நிமிடம், 45 நொடிகள் காட்ட உள்ளது . அது மட்டுமல்ல.அன்று சிலியில் நம்ம சூரியனார், கருப்பு சூரியனாகவே, கடலுக்குள் குளித்துக் கொண்டே மறைவார்.

கிரகணப் பிரியர்கள்.. ஈஸ்டர் தீவு.. நோக்கி..!


ஈஸ்டர் தீவில், இந்த பிரம்மாண்ட மாவோய சிலைகளுக்கு பின்னால் அற்புதமாய் கருப்பு சூரியன் தெரிவார்

இந்த சூரிய கிரகணம், சாரோஸ் 146 வகையைச் சேர்ந்தது, பொதுவாக ஒரு சாரோஸ் சுழற்சி என்பது, 18 ஆண்டுகள்,11 நாட்கள், 8 மணி நேர காலம் அடங்கியது.,சார் என்ற பழங்கால சுமேரியன் அலகில் இருந்தே, சாரோஸ் என்ற கிரேக்க பெயர் உருவானது. ஈஸ்டர் தீவில் இன்னொரு சிறப்பு காட்சியும் தென்படும். மாலை வேளையில் காணப்படும் முழு சூரிய கிரகணம், அந்த பிரம்மாண்டமான, 10 மீ. உயர சிலைகளின் ஊடே. கருப்பு சூரியனாய் மிளிர்வதை படம் எடுக்க , கண்டு களிக்க உலகின் பல பகுதிகளிருந்து கிரகணப் பிரியர்கள். மற்றும் நிழற்பட நிபுணர்கள் பறந்து செல்ல உள்ளனர். இது மாலை நேரம் நிகழவதால், கருப்பு சூரியன், அந்தியை சந்தித்துக் கொண்டே கடலில், சந்தோஷமாக முக்குளிக்கிறது..இது ஓர் அற்புதமான நிகழ்வு. அடுத்த் முழு சூரிய கிரகணத்தைச் சந்திக்க நாம் இன்னும் ஓர் ஆண்டு, 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆம், அடுத்த முழு சூரிய கிரகணம் நிகழும் நாள், 2012 . நவம்பர் 13 ..!


பேஸ்புக்கில் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

யாம்  பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் .
நன்றி: மோகனா அக்காPost Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்

  NeoCounter

  என்னை பற்றி ...

  My Photo
  என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.