அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



ஆதிமனிதர்களின் புதைபடிமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களும் உண்மையில் எவ்வாறு வேறுபட்டுள்ளார்கள் என்பது குறித்த விஞ்ஞான கருத்துக்களும், பிற பிரபல கருத்துக்களும் தொடர்ந்து மாறுபட்டு வந்தன. மூட்டுவீக்கம் காரணமாக எலும்புகளில் அசாதாரண தன்மைகளை கொண்ட வயதான ஆணின் முழுமையான எலும்புகூட்டைச் சார்ந்து கூறப்பட்ட கருத்துகள் என்பதால் ஆதிகால மனிதர்கள் பற்றிய சில முந்தைய வர்ணனைகள் மிகவும் மாறுபட்டிருந்தன. 


பெருமளவிலான மாதிரிகளின் அடிப்படையில் பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஆதிகால மனிதர்களின் உருவ தோற்றம் நவீனகால மனிதர்களுடன் இருந்த ஓரளவு வேறுபாட்டை குறைத்தது. தற்போதும் உயிருடன் இன்றைய நகர தெருக்களில் நடந்து செல்லும் ஆதிகால மனிதர்கள் (பொருத்தமான உடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொண்ட ஆதிகால மனிதர்கள்) யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இந்த சிந்தனை அமெரிக்காவின் சமீபத்திய வாகனத்துறை காப்பீட்டு தொடர்பான விளம்பரங்கள் ஒன்றிலும் பிரதிபலித்திருந்தது.

பேலியோன்தாலஜியின் (ஆதிகால மனிதர்கள் பற்றிய புதைபடிமானங்களை ஆராயும் துறை) ஒரு பகுதியாகவும், மனிதயின பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விலும் குறிப்பாக, புதைபடிமான எலும்பு மற்றும் தொல்பொருள் போன்ற பிற ஆதார தரவுகளின் பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கும் கூடுதலாக, எந்த அளவிற்கு புதைபடிமான மரபணு பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையே கடந்த தசாப்தங்களில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் உண்மையான அபிவிருத்திகளையும், பல்வேறு வகையான தரவுகளின் கருத்துகளுக்கு இடையிலுள்ள முரண்பாடுகள் மீதான ஒரு செயல்முறையையும் மற்றும் தர்க்கரீதியாக நோக்கங்கள் மாறுபடுவதையும் வெளிச்சமிட்டு காட்ட இந்த புதிய தரவுகளின் அபிவிருத்தி உதவுகிறது. இந்த முரண்பாட்டின் காரணமாக, ஒரு காலத்தில் வலுவாக பொருள்படுத்தப்பட்டதாக தோன்றிய தகவல்கள், முன்னர் இருந்த தரவுகளையும், கைவசம் இருக்கும் புதிய தரவுகளையும் மிக துல்லியமாக ஒருங்கிணைக்கும் தெளிவான புதிய ஒன்றால் தூக்கி எறியப்படுகின்றன. இந்த சச்சரவான செயல்முறை, அடிக்கடி பரந்த சமூகத்தில் உள்ள அரசியல் மற்றும் சமூக போக்குகளின் 'வெளித்தாக்கத்தையும்' பிரதிபலிக்கிறது.

புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதயின பரிணாமத்தையும், குறிப்பாக ஆதிகால மனிதர்களைப் பற்றிய சில அடிப்படை ஆய்வுகளையும் மீள்பார்வையிட வேண்டியது அவசியமாகும்.

பல்வேறு கருத்துகளின் முடிவுகளை குறிக்கும் விதமாக, ஆதிகால மனிதர்கள் குறித்த இரண்டு முக்கிய கண்ணோட்டங்கள் வரையறுக்கலாம். ஒன்று, உயிரினங்களின் அளவில் நவீனகால மனிதர்களை முற்றாக பிரித்து (வேறுபடுத்தி) பார்ப்பது. மற்றொன்று, நவீனகால மனிதர்களுடனான வேறுபாடுகள் நவீனகால மனிதர்களின் வேறுபட்ட மக்களிடையே இன்று காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் தான் என கருதப்படுதல். இதே போன்ற முடிவுக்கு வருபவர்கள் கருதுவது என்னவெனில், ஐரோப்பாவில் வாழ்ந்த பண்டைய ஆதிகால மனிதர்களிடமிருந்து குறிப்பாக ஐரோப்பியர்கள் சில மரபணு பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பதாகும்.

தகவல்களின் மறுபக்க கருத்துப்படி, ஆதிகால மனிதர்களும், நவீனகால மனிதர்களின் மூதாதையர்களும் நீண்ட காலத்திற்கு முன்னரே (அதாவது, 400,000த்திற்கு மேலான ஆண்டுகளுக்கு முன்னர்) கூடி இருந்ததாகவும், அவர்களுக்கு இடையிலான மரபுவழி வேறுபாடுகள் மாதிரிகளின் அளவில் வேறுபட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், இரு குழுக்களும் மரபுவழியில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவை தங்களுக்குள் கலப்பின சேர்க்கையிலும் ஈடுபட்டிருக்க முடியாது என்பதேயாகும். 

ஆதிகால மனிதர்கள் ஒருவேளை ஒரேயின ஆதிகால மனிதர்களாக, அதாவது ஓரின மரபணு மட்டுமே கொண்ட ஓர் உயிரினமாக (ஆணாகவோ அல்லது மனிதர்களாகவோ) இருந்திருக்கலாம்ஆனால் ஹோமோசேப்பியன்களிTM (நவீன மனிதர்களில்) இருந்து வேறுபட்டோ அல்லது நவீன மனித ஆதிவாசிகளாகவோ (ஹோமோசேப்பியன்களுக்கு இணையான தகுதிகளைக் கொண்ட உபஉயிரினங்களாகவோ)இருந்திருக்கலாம் என்ற கருத்துகளின்படி, இந்தவேறுபாடானதுபடிமுறையியலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபஉயிரினம் என்பது நவீன மனிதயினத்தை குறிக்கிறது.

வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையே மரபணு பரிமாற்றம் ஏற்பட முடியுமா என்பதில் தான் உயிரினங்கள் அளவிலான பிளவுகள் அமைந்துள்ளது. ஆதிகால மனிதர்களுக்கும், நவீனகால மனிதயினத்திற்கும் இடையே கலப்பின சேர்க்கை இருந்ததா, இல்லையா என்ற கேள்வியை வரலாற்றின் முக்கிய கலாச்சாரங்களில், சான்றாக, Clan of the cave Bear மற்றும் Quest for fireபோன்ற திரைப்படங்களில் தொடப்பட்டுள்ளன. அண்ணளவாக 400,000த்திற்கு முந்தைய ஆண்டுகளின் தொடக்கத்தில், நவீனகால மனிதயினம் முதன்முதலாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தோன்றியதாகவும், வெளிப்படையாக ஆதிகால மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் இவை புதைபடிமான தடயங்களில் மறைந்துவிட்டன என்பது போன்று கடைசி உறைபனி காலத்தின் (Ice Age or Pleistocene) இறுதி பகுதிக்குரிய காலத்தை இந்த திரைப்படங்கள் எடுத்துக்காட்டின.

இந்த இரண்டு மக்களுக்குமிடையே ஏதேனும் தொடர்புகள் இருந்திருந்தால், இயல்பாக என்ன மாதிரியானதாக இருந்திருக்கும்? நவீனகால மனிதர்கள் தங்களின் பண்டைய உறவினர்களான ஆதிகால மனிதர்களுடன் புத்திசாலித்தனமாக போட்டியிட்டு, உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் அல்லது ஒருவேளை வன்முறையால் அவர்களை பூண்டோடு இல்லாதொழித்தனவா? அல்லது முந்தையவர்களின் மரபணு பின்னர் வந்தவர்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் நவீனகால மனிதர்களும் ஆதிகால மனிதர்களும் கலப்பு சேர்க்கையில் ஈடுபட்டனரா? இரண்டாவதாக கூறப்படும் கருத்து உண்மையானால், ஆதிகால மனிதர்கள் நடப்பிலிருந்து மறைந்துவிடவில்லை என்றாகிறது. அவர்கள் புதைபடிமான தடயங்களிலிருந்து மட்டுமே மறைந்திருக்கிறார்கள் என்றும், ஏனெனில் அவர்களின் வழிதோன்றல்கள் நவீனகால மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு பெருமளவில் அவர்களுள் கலந்துள்ளனர் என்றும் தோன்றுகிறது.

அடிப்படையில் வன்முறை தான் மனித இயற்கை என்பதன் அறிகுறியாக முதல் கருத்தை (அதாவது, ஆதிகால மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டனர் என்ற கருத்து) திரித்து கூறும் முயற்சிகளும் நடைமுறையில் உள்ளன. இதன் மறுபக்கம், அமைதிக்கான மனிதயின மனப்போக்கு (அதாவது, யுத்தம் இல்லாமல் அன்பை உருவாக்கும் மனப்போக்கு) இருப்பதற்கான ஒரு 'நம்பிக்கையான' அறிகுறியைக் குறிக்கும் வகையில், இரண்டு குழுக்களின் மரபணு ஒன்று கலந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. உண்மை மேலும் குழப்பமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் இந்த முடிச்சு அவிழ்க்கப்படும் போது, ஒட்டுமொத்தமாக மனிதயின பரிணாமத்தை புரிந்து கொள்வதற்கான உயர்ந்த படிப்பினை கிடைக்கும். கடந்த தசாப்தத்தின் தோற்ற பதிவேடு ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி இரண்டும் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் பல தகவல்களை அளித்துள்ளன.

கடந்த அரை நூற்றாண்டில், கிழக்கு ஆரிக்காவில் பண்டைய உடல்கூறு (Australopithecine hominid) புதைபடிமானங்கள் கிட்டத்தட்ட கண்டுப்பிடிக்கப்பட்டதிலிருந்து, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதயினத்தின் முன்னோர் வாழ்ந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. மனிதயின பரிணாமம் குறித்து பொதுவாக இரண்டு வித கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. 

ஒன்று, Unilineal(யூனிலீனியவாதம் -ஒரேயொரு பெற்றோர் வழியில் வந்த உயிரினங்கள்); மற்றொன்று, Multilineal (மல்டிலீனியவாதம்- அதாவது பல பெற்றோர் வழியில் வந்த மரபு) அல்லது கிளை வழி கண்ணோட்டம் என்பது. ஹோமினிட் (Hominid) என்ற வார்த்தை நவீனகால மனிதர்களைக் குறிக்கிறது. மேலும் அவர்களின் மூதாதையர்கள் மற்றும் அவர்களின் உடனொத்த கிளை மரபு உறவினர்களிடையே நடந்த இனக்கலப்பு ஹோமினிட்களிடையே பிரிவை ஏற்படுத்தியது. இறுதியாக, அதன் வழிதோன்றல்களான சிம்பன்சிகளை (Chimpanzee) உருவாக்கியது. 

இது சுமார் 6.5 மில்லியன் மற்றும் 10 மில்லியன் ஆண்டுகளில் நடந்திருக்கலாம். மனிதர்களின் மற்றும் சிம்பன்சியின் DNA சுமார் 96 சதவீதம் ஒத்திருக்கின்றன. பிற வாலில்லா குரங்குகளை விட இந்த இரண்டு குழுக்களுக்கு இடையே நெருங்கிய பரிணாம உறவுகள் இருப்பதை தான் இது குறிப்பிட்டு காட்டுகிறது.

முற்றும் ....

Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.