அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

Ghana pay the penalty


உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு, உருகுவே அணி முன்னேறியது. இன்று நடந்த காலிறுதியில் கானா அணியை, "பெனால்டி ஷூட் அவுட்டில்' வீழ்த்தியது. கடைசி வரை போராடிய கானா அணிக்கு, "பெனால்டி கிக்' வாய்ப்பை வீணடித்த, ஜியான் வில்லனாக மாற, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.



தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின. 


போட்டி துவங்கியது முதல் இரு அணியினரும் முன்னிலை பெற போராடினர். உருகுவே அணிக்கு அடுத்தடுத்து, "கார்னர் கிக்' வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும் இதை வீணடித்தனர். 


போட்டியின் 29 மற்றும் 31 வது நிமிடத்தில் கானா அணிக்கு "சூப்பர்' 
வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை வோர்ஷா, ஜியான் ஆகியோர் கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்து ஏமாற்றினர். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கானாவின் முன்ட்டாரி, கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இப்படி தொடர்ந்து நடத்திய தாக்குதலுக்கு, கடைசியில் பலன் கிடைத்தது. முதல் பாதியின் "ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (47வது நிமிடம்) கானாவின் முன்ட்டாரி, 27 மீட்டர் தொலைவில் அசத்தல் கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதியில் கானா அணி 1-0 என முன்னிலை பெற்றது. 


Future still bright for distraught Stars


உருகுவே பதிலடி: 
இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட, உருகுவே அணிக்கு 55வது நிமிடத்தில் "பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை அணியின் நட்சத்திர வீரர் போர்லன், கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க, இது அசத்தலான கோலாக மாறியது. இதையடுத்து ஸ்கோர் 1-1 என சமனானது. 63வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு வாய்ப்பை, உருகுவேயின் சுவாரெஜ் வீணாக்கினார். இறுதியில் இரு அணியினரும், மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், 1-1 என போட்டி சமனானது. 


கூடுதல் நேரம்: 
இதையடுத்து போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. முதல் பாதியில் இருஅணியினரும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும் கானா அணியினர் தொடர்ந்து, உருகுவே கோல் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குல் நடத்தினர். 


யார் வில்லன்? 
போட்டியின் "ஸ்டாப்பேஜ்' (122 வது நிமிடம்), கானா அணியினர் அடித்த பந்தை, கோல் லைனில் வைத்து கையால் தடுத்து, உருகுவே அணிக்கு வில்லனாக மாறினார் முன்னணி வீரர் சுவாரெஜ். இதையடுத்து உடனடியாக நடுவரால் "ரெட்கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் செய்த தவறு காரணமாக, கானாவுக்கு "பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கோல் அடித்து அணியை, அரையிறுதிக்கு கொண்டு செல்லலாம் என்ற கனவுடன், வந்தார் ஜியான். ஆனால் பந்தை கோல் போஸ்டின் மேல் அடித்து வில்லனாக மாறினார். கூடுதல் நேரத்திலும் ஸ்கோர் 1-1 என சமமாக இருந்தது. 


Ghana pay the penalty


கானா தோல்வி: 
இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. 


* முதல் வாய்ப்பில் போர்லன்(உருகுவே), ஜியான்(கானா) கோல் அடித்தனர். 


* இரண்டாவது வாய்ப்பில் விக்டோரினோ(உருகுவே), அப்பியா(கானா) என இருவரும் கோல் அடிக்க, ஸ்கோர், 2-2 என சமநிலை எட்டியது. 
* மூன்றாவது வாய்ப்பில் கானாவின் மென்ஷா, பந்தை கோல் கீப்பரிடம் அடித்து வாய்ப்பை வீணாக்கினார். ஆனால் ஸ்காட்டி (உருகுவே) தன் பங்கிற்கு கோல் அடிக்க, உருகுவே 3-2 என முன்னிலை பெற்றது. 


* நான்காவது வாய்ப்பை உருகுவேயின் பேராரா, கோல் போஸ்ட்டுக்கு மேலாக அடித்து ஏமாற்றினார். மீண்டும் ஸ்கோரை சமன் செய்ய கானாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடியாவும் (கானா) கோல் 
கீப்பரிடம் அடித்து கோட்டைவிட, கானாவின் தோல்வி உறுதியானது. (3-2) 


* ஐந்தாவது வாய்ப்பில் தந்திரமாக செயல்பட்ட அப்ரியூ (உருகுவே), பந்தை மெதுவாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்து, கோலாக மாற்றினார். (4-


2) இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில், 5-3 என வென்ற உருகுவே அணி, ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.