அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

 Uruguay-Netherlands preview

உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் உருகுவே, நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் வலம் வரும் இரு அணிகளும், எளிதாக விட்டுக்கொடுக்காது என்பதால், ரசிகர்களுக்கு விறு விறுப்பான போட்டி காத்திருக்கிறது.
 

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின. பின் நடந்த "ரவுண்டு-16' மற்றும் காலிறுதி போட்டிகளின் முடிவில், அர்ஜென்டினா, பிரேசில் போன்ற பலமிக்க அணிகள் வெளியேறின.
தற்போது கோப்பை வெல்லும் போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே மற்றும் நெதர்லாந்து என நான்கு அணிகள் மட்டுமே உள்ளது. இதனிடையே முதல் அரையிறுதி போட்டி, இன்று இரவு கேப்டவுன், கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இதில் இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் வலம் வரும் நெதர்லாந்து அணி, இரண்டு முறை கோப்பை வென்ற (1930, 1954) உருகுவே அணியை சந்திக்கிறது.
The rest is history for the Dutch

நழுவிய வாய்ப்பு:
தரவரிசையில் 4வது இடத்திலுள்ள நெதர்லாந்து அணி, கடந்த 1974, 1978 என இரு முறை பைனலு<க்கு முன்னேறிய போதும், இதுவரை கோப்பை வென்றதில்லை. இம்முறை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்த அணி, பைனலுக்கு செல்லும் நோக்கத்தில் உள்ளது. 

"சேம்-சைடு' அதிர்ஷ்டம்:
இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 9 கோல்கள் அடித்துள்ள இந்த அணிக்கு, "சேம்-சைடு' கோல் கிடைக்கும் அதிர்ஷ்டம் <உள்ளது. டென்மார்க்கிற்கு எதிரான முதல் லீக் போட்டியில் துவங்கிய இந்த அதிர்ஷ்டம், பிரேசிலுக்கு எதிரான காலிறுதி வரை தொடர, அணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது. 

ஸ்னைடர் பலம்:
அணியின் நட்சத்திர வீரர் ஸ்னைடர், இதுவரை மொத்தம் 4 கோல்கள் அடித்து இத்தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து அர்ஜென் ராபென், டர்க் குயிட் போன்றவர்கள் தலா ஒரு கோல் அடித்துள்ளனர். இவர்கள் இன்று எழுச்சி பெறும் பட்சத்தில், உருகுவே அணிக்கு சிக்கல் தான். தவிர, கேப்டன் ஜியோவானி வான் புரோங்க்ஹர்ஸ்ட், வான் டர் வார்ட் ஆகியோர் அசத்தலான ஆட்டத்தை தருவார்கள் என நம்பலாம். இவர்களுடன் பிரேசிலுக்கு எதிரான காலிறுதியில் காயமடைந்த ராபின் வான் பெரிஸ் மற்றும் மதிஜ்சென், இன்றைய போட்டியில் பங்கேற்பது அணிக்கு கூடுதல் பலம்.

உருகுவே நம்பிக்கை:
தரவரிசையில் 16வது இடத்திலுள்ள உருகுவே அணி, இதுவரை பங்கேற்ற ஐந்து போட்டிளில் நான்கில் வெற்றியும், ஒன்றில் "டிரா'வும் செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர் துவங்கும் முன், இந்த அணி இந்தளவுக்கு முன்னேறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 

சபாஷ் கேப்டன்:
உருகுவே அணியின் டீகோ போர்லன், இத்தொடரில் 3 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளார். தவிர, மற்றொரு வீரர் எடின்சன் கவானி, பந்துகளை சிறப்பாக "பாஸ்' செய்வதில் வல்லவர். ஆல்வரோ பெரீராவும் அசத்துவார் எனத்தெரிகிறது. தவிர, செபஸ்டியன் அப்ரியூ, செபஸ்டியன் பெர்னாண்டஸ், ஆல்வரோ பெர்னாண்டஸ் ஆகியோரும் அணிக்கு கைகொடுக்கலாம்.

சாரெஸ் இழப்பு:
தொடரின் துவக்கத்தில் இருந்தே அணிக்கு சிறப்பான ஆட்டத்தை (3 கோல்) வெளிப்படுத்தி வந்த, நட்சத்திர வீரர் சாரெஸ், கடந்த போட்டியில் பந்தை கையால் தடுத்து, "ரெட் கார்டு' பெற்றார். இவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அணிக்கு மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இருப்பினும் தற்காப்பு பகுதியில் அசத்தும் உருகுவே அணி, ஒட்டுமொத்தமாக இணைந்து வெற்றிக்கு முயற்சிப்பது உறுதி.

ஸ்னைடர் நம்பிக்கை
பிரேசிலுக்கு எதிரான காலிறுதியில் வெற்றிபெற்ற பின், பைனலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என, நெதர்லாந்து அணியின் ஸ்னைடர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில்,"" பிரேசிலுக்கு எதிரான போட்டியில் முதல் பாதியில் பின்தங்கியிருந்தோம். இதையடுத்து இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கி போட்டியில் வென்றோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு, இத்தொடரின் பைனலுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

சிரித்தவர்களுக்கு பதிலடி
இன்றைய போட்டி குறித்து நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் வான் மர்விக் கூறியது:
 தென் ஆப்ரிக்காவுக்கு கோப்பை வெல்லவே வந்துள்ளோம் என, இத்தொடர் துவங்கும் முன்பு நான் தெரிவித்தேன். ஆனால் எல்லோரும் இதைக் கேட்டு சிரித்தார்கள். தற்போது இருவாரங்களுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளவுள்ள உருகுவே அணியை இதற்கு முன் சந்தித்துள்ளோம். ஒருசில அசத்தல் வீரர்கள் இவர்களிடம் உள்ளனர். அநேகமாக இரு அபாயகரமான போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே வெற்றி பெற்ற கூட்டணியில் தற்போது மாற்றம் செய்ய விரும்பவில்லை. இருப்பினும் எங்கள் வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால், பைனலுக்கு முன்னேறுவோம் என நம்புகிறேன்.இவ்வாறு மர்விக் கூறினார்.

தொல்லை தரும் காயம்
உருகுவே அணியைப் பொறுத்தவரையில் காயம் பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. இன்றைய அரையிறுதியில் தடை காரணமாக சாரெஸ் விளையாட முடியாத நிலையில், ஜார்ஜ் பியூஜிலி மற்றும் டீகோ கோடின் ஆகியோரும் காயத்தால் அவதிப்படுகிறார்கள். தவிர, வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் டீகோ லுகானோவும், இன்று பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. 
இதுகுறித்து இவர் கூறுகையில்,"" காயமடைந்து 48 மணி நேரத்தில் மீண்டும் குணமடைந்துள்ளேன். வலியுடன் எப்படி போட்டியில் பங்கேற்பது என்ற கவலையில் இருந்தேன். ஆனால் தற்போது 100 சதவீதம் சரியாகி இருப்பது மகிழ்ச்சியாக <உள்ளது. நெதர்லாந்தின் எவ்வித தாக்குதலையும் சமாளிக்க தயாராகியுள்ளோம். கடவும் விருப்பப்பட்டால், எங்கள் அணி பைனலுக்கு முன்னேறும். இருப்பினும் போட்டி துவங்கும் கடைசி நிமிடம் வரை, அணியில் வாய்ப்புக்காக காத்திருப்பேன்,'' என்றார்.

கடந்து வந்த பாதை...உருகுவே
லீக் சுற்று:


* பிரான்சுடன் "டிரா' (0-0)
* தென் ஆப்ரிக்காவுடன் வெற்றி (3-0)
* மெக்சிகோவை வென்றது (1-0)
"ரவுண்டு-16' சுற்று:
* தென் கொரியாவை வீழ்த்தியது (2-1)
காலிறுதி:
* கானாவை வென்றது (5-3)


நெதர்லாந்து
லீக் சுற்று:


* டென்மார்க்குடன் வெற்றி (2-0)
* ஜப்பானை வென்றது (1-0)
* காமரூனை வீழ்த்தியது (2-1)
"ரவுண்டு-16' சுற்று:
* சுலோவேகியாவுடன் வெற்றி (2-1)
காலிறுதி:
பிரேசிலை வென்றது (2-1)


இதுவரை...


இரு அணிகளும் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.


சாதனை பயணம்


நெதர்லாந்து அணியை இதுவரை கடைசியாக பங்கேற்ற 24 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வருகிறது. தவிர, கடைசி 13 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளது. இன்றும் வெற்றி தொடரும் பட்சத்தில், பைனலுக்கு முன்னேறி சாதிக்கலாம்.


தொடர் தோல்வி


தென் அமெரிக்க அணியான உருகுவே, உலக கோப்பை தொடரில் கடந்த 40 ஆண்டுகளாக, ஐரோப்பிய அணிகளுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் தவித்து வருகிறது. கடந்த 1970ல் காலிறுதியில் ரஷ்யாவை வென்ற பிறகு, இதுவரை 13 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 6 போட்டிகளில் "டிரா'வும், ஏழு போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
 



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.