உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் . டெஸ்ட் போட்டியில் அதிக ரன், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
21 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழ்கிறார்.
டெண்டுல்கரை பாராட்டும் விதமாக லண்டனை சேர்ந்த கிரகென் மீடியா நிறுவனம் அவரை பற்றிய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறது. சிறப்பு புத்தகம், சாதாரண புத்தகம் என்று 2 வகைகளில் தெண்டுல்கரின் சுயசரிதை வெளியிடப்படுகிறது.
சிறப்பு புத்தகத்தில் டெண்டுல்கர் ரத்தத்தில் கையெழுத்திட்டது இருக்கும். உயர்தர காகிதத்துடன் தங்க இலைகளுடன் கூடிய வகையில் இந்த புத்தகம் இருக்கும். இதில் தெண்டுல்கர் பற்றி அனைத்து தகவல்கள், அபூர்வ தகவல்கள், புகைப்படங்கள் இருக்கும்.
மும்பையில் பள்ளி கட்டிடம் கட்ட தெண்டுல்கரின் அறக்கட்டளை உதவுகிறது. அதற்காக இந்த சிறப்பு புத்தகம் வெளியிடப்படுகிறது.
இதேபோல சாதாரண புத்தகம் ஆயிரம் பிரதிகளில் வெளியாகிறது. இதன் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.1.38 லட்சம் வரை இருக்கும்.
0 comments:
Post a Comment