இங்கிலாந்தில் மனிதன் முதன்முதலாக எப்போது தோன்றினான் என்பது பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 2005 ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இங்கிலாந்தில் மனிதன் 700000 வருடங்களுக்கு முன்னர் தோன்றினான் என கருத்து தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஆராய்ச்சியின்படி 950000 வருடங்களுக்கு முன்னரே முதல் மனித இனம் இங்கிலாந்தில் தோன்றியிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுமார் 950000 வருடங்களுக்கு முன்னால் மனிதன் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் பல கிடைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள நோர்போல்க் கடற்கரையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோண்டிய போது ஆதி கால மனிதன் பயன்படுத்திய கூற்மையான கற்களால் ஆன 78 வெட்டுக்கருவி ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இக்கருவிகள் 840,000 அல்லது 950,000 வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆதி கால மனிதனுடன் அழிந்த உயிரனமான மாமூத் யானைகள் மற்றும் செம்மான் போன்ற விலங்குகள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment