உலக கிரிக்கெட் வரலாற்றிலே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்தையா முரளிதரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவுக்குமிடையிலான காலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெறுகிறார்.
2011 உலக கோப்பை வரை விளையாடுவர் என்று பலர் எதிர்பார்த்திருந்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முகமாகவே தாம் ஒய்வு பெறுவதாக கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரன் பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை அணிக்காக 1992 இல் முதல் டெஸ்ட் போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில்விளையாடினார்.
இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட்டுகளையும், 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment