அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube



Contrasting victories, equal reward


உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. நேற்று நடந்த விறுவிறுப்பான காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. அபாரமாக ஆடி 2 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ், அர்ஜென்டினாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதியில் உலக ரேங்கிங் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை(7வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள். தவிர, ஐரோப்பாவின் சிறந்த அணிகள் என்பதால் "பைனல்' போன்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.


ஜெர்மனி ஆதிக்கம்:
முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 3வது நிமிடத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் பந்தை அடித்தார். அதனை தலையால் முட்டி முல்லர் சூப்பராக கோல் அடிக்க, ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஓசில், கெதிரா, டெமிக்லஸ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஆட, அர்ஜென்டினா அணி செய்வதறியாமல் திணறிப் போனது. பின் 24வது நிமிடத்தில் முல்லர் பந்தை "பாஸ்' செய்தார். அதனை குளோஸ் அடித்தார். ஆனால், நூலிழையில் விலகிச் சென்றது. 37வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் பந்தை கோல் போஸ்டுக்குள் அடித்தார். ஆனால், நடுவர் "ஆப்சைடு' என அறிவிக்க, நொந்து போனாõர். 39வது நிமிடத்தில் ஜெர்மனியின் பொடோல்ஸ்கி அடித்த "ஷாட்' இலக்கு தவறி பறந்தது. 44வது நிமிடத்தில் முல்லார் அரிய வாய்ப்பை வீணாக்கினார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.


Rampant Germany oust Argentina


மெஸ்சி ஏமாற்றம்:
இரண்டாவது பாதியில் துவக்கத்தில் அர்ஜென்டினா வீரர்கள் போராடினர். ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சி ஏமாற்றம் அளித்தார்.


கோல் மழை:
இதற்கு பின் ஜெர்மனி கோல் மழை பொழிந்தது. 68வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் "பெனால்டி ஏரியா'வுக்குள் பாய்ந்து சென்றார் பொடோல்ஸ்கி. பின் சுயலநலம் இல்லாமல் பந்தை குளோஸ் இருக்கும் திசையில் அருமையாக "பாஸ்' செய்தார். தன் கண் முன்னே வந்த பந்தை அப்படியே நடந்து சென்றவாறு சுலபமாக குளோஸ் கோல் அடிக்க, ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் அடுத்த தாக்குதலை ஜெர்மனி படை தொடுத்தது. இம்முறை ஸ்கீவன்ஸ்டீகர் "பாஸ்' செய்ய, பிரடரிக் அற்புதமான கோல் அடித்து மைதானத்தில் அப்படியே படுத்து மகிழ்ந்தார். இதையடுத்து ஜெர்மனி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. 89வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி பந்தை ஓசிலுக்கு "பாஸ்' செய்தார். அதனை பெற்ற குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை <உறுதி செய்தார். இறுதியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மாரடோனா பயிற்சியில் தேறாத அர்ஜென்டினா அணி, பரிதாபமாக வெளியேறியது. 


ஆட்ட நாயகன் விருதை ஜெர்மனியின் ஸ்கீவன்ஸ்டீகர் வென்றார்.

அவமானம்: 
உலக கோப்பை வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என சவால் விடுத்தார் பயிற்சியாளர் மாரடோனா. தற்போது அர்ஜென்டினா காலிறுதியுடன் வெளியேறியதால், அந்த நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளார். மாறாக படுதோல்வி அடைந்த அவமானத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது. 

சபாஷ் "ஆக்டோபஸ்' 
அர்ஜென்டிõவுக்கு எதிராக ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்ற "ஆக்டோபஸ்' கணிப்பு உண்மையாகி உள்ளது. 
ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள "ஆக்டோபஸ்', கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. இம்முறை உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்று சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று சரியாக சொன்னது. இதே போல காலிறுதியில் ஜெர்மனி வெற்றி பெறும் என்று கணித்தது. இது தற்போது பலித்துள்ளது.

இரண்டாவது வீரர்
அர்ஜென்டினா அணிக்கு எதிரான காலிறுதியில் விளையாடியதன்மூலம், ஜெர்மனி நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 100வது போட்டியில் பங்கேற்றார். இதுவரை இவர் 100 போட்டியில் விளையாடி 52 கோல் அடித்துள்ளார்.
* நேற்றைய போட்டியில் இரண்டு கோல் அடித்த குளோஸ், உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை, சகவீரர் ஜெர்டு முல்லருடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.

200வது கோல்
அர்ஜென்டினாவுக்கு எதிரான நேற்றைய காலிறுதியில், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் முதல் கோல் அடித்தார். இது உலக கோப்பை கால்பந்து அரங்கில், ஜெர்மனி அணியின் 200வது கோல். இதுவரை 97 போட்டியில் விளையாடியுள்ள ஜெர்மனி அணி, 203 கோல் அடித்து, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அர்ஜென்டினா (97 போட்டி, 211 கோல்) உள்ளது.


* நேற்று 4 கோல் அடித்த ஜெர்மனி அணி, இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதுவரை 5 போட்டியில் விளையாடிய ஜெர்மனி, 13 கோல் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா (5 போட்டி, 10 கோல்), நெதர்லாந்து, பிரேசில் (தலா 5 போட்டி, தலா 9 கோல்) அணிகள் உள்ளன.

பழிதீர்க்க முடியவில்லை
கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில், ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை அர்ஜென்டினா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் வெளியேறியது.



Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.