அறிந்தவை,படித்தவை, ரசித்தவை உங்களுடன்....

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube

Uruguay-Germany preview

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஜெர்மனி, உருகுவே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தவை என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் பைன<லுக்கு ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் முன்னேறின. அரையிறுதியில் தோல்வி அடைந்த ஜெர்மனி, உருகுவே அணிகள் இன்று நடக்கும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
வருகிறார் முல்லர்: 
உலககோப்பை பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ஸ்பெயினிடம் பரிதாபமாக இழந்தது ஜெர்மனி அணி. இன்றைய போட்டியில் உருகுவேயிடம் சிறப்பாக ஆடினால் மட்டுமே மூன்றாவது இடத்தை எட்ட முடியும். கடந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த தாமஸ் முல்லர், இன்று களமிறங்குவது, ஜெர்மனியின் பலத்தை அதிகரித்துள்ளது.

குளோஸ் சந்தேகம்:
ஸ்பெயினுக்கு எதிரான அரையிறுதியில் முதுகுப் பகுதியில் காயம் அடைந்தகுளோஸ் பங்கேற்பது சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் நட்சத்திர வீரர்களான பொடோல்ஸ்கி, டிராகோவ்ஸ்கி,டோனி குரோஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தற்காப்பு பாணியிலான ஆட்டத்தை விட்டு, அதிரடியாக ஆடினால் மட்டுமே ஜெர்மனிக்கு, வெற்றி கைகூடும். 

உருகுவே நம்பிக்கை: 
துடிப்புடன் விளையாடி வரும் உருகுவே அணி வீரர்கள், ஜெர்மனிக்கு இன்று அதிர்ச்சி அளிக்க காத்திருக்கின்றனர். அணியின் நட்சத்தி வீரர் போர்லான், காயம் அடைந்துள்ளார். இன்று அவர் பங்கேற்பதில் இழுபறி நீடிக்கிறது. மற்றொரு முன் கள வீரர் சோரஸ் இன்று களமிறங்குகிறார். ஸ்கோட்டி, பெரைரா, கான்சலஸ் உள்ளிட்ட வீரர்கள் உருகுவே அணிக்கு பலம் சேர்க்க உள்ளனர். இன்றைய போட்டி குறித்து உருகுவே வீரர் சோரஸ் கூறுகையில்,"" கடந்த போட்டியில் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்தது. இன்றைய போட்டியை பைனலாக கருதி விளையாடுவோம். ஜெர்மனி அணியை குறைவாக மதிப்பிட வில்லை. சிறப்பாக செயல்பட்டு "டாப்-3' அணிகளுக்குள் இடம் பெறுவதே லட்சியம்,'' என்றார். 

இதற்கு முன்: 
இதற்கு முன் கடந்த 1970 ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலககோபை தொடரில், உருகுவே, ஜெர்மனி அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதி உள்ளன. இப்போட்டியில், ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை உருகுவே பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. ஜெர்மனி அணி, இதற்கு முன் உலககோப்பை அரங்கில் 3 முறை (1934, 1970, 2006) மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. முன்னாள் சாம்பியனான உருகுவே அணி, இதற்கு முன் உலககோப்பை அரங்கில் மூன்றாவது இடத்தை பெற்றதில்லை. இரண்டு முறை நான்காவது இடம் (1954, 1970) மட்டுமே பெற்றுள்ளது. 

சாதனை படைப்பாரா குளோஸ்?

உலககோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸ்.
கடந்த 2002 ஆசியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் ஜெர்மனியின் குளோஸ் அறிமுகமானார். முதல் தொடரிலேயே 5 கோல் அடித்தார். 


இதனையடுத்து 2006 ம் சொந்த மண்ணில் நடந்த தொடரிலும் 5 கோல்கள் அடித்தார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு தொடர்களில் 5 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். தற்போது நடக்கும் தொடரில் இதுவரை 4 கோல்கள் அடித்து "கோல்டன் ஷூ' பந்தயத்தில் உள்ளார். 
தவிர, உலக கோப்பை அரங்கில் இதுவரை மொத்தம் 14 கோல்கள் அடித்து, சகவீரர் ஜெரார்டு முல்லரின் சாதனையை சமன் செய்துள்ளார். 


இந்த வரிசையில், பிரேசிலின் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இவர் மூன்று உலக கோப்பை தொடர்களில் (1998, 2002, 2006) 15 கோல்கள் அடித்துள்ளார். இன்று 2 கோல் அடித்தால், ரொனால்டோ சாதனையை குளோஸ் தகர்க்கலாம். ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில் சாதனையை சமன் செய்யலாம். உருகுவே அணிக்கு எதிரான இன்றைய போட்டி, உலககோப்பை அரங்கில் குளோசுக்கு கடைசி போட்டியாகும். தற்போது 32 வயதாகும் குளோஸ், அடுத்த உலககோப்பையில் பங்கேற்பது உறுதி இல்லை. 
உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த "டாப்-5' வீரர்கள்:     


1.ரொனால்டோ    பிரேசில்    15
2.குளோஸ்    ஜெர்மனி    14
3. முல்லர்    ஜெர்மனி    14
4. போன்டைன்    பிரான்ஸ்    13
5. பீலே    பிரேசில்    12

கடந்த வந்த பாதை... 

ஜெர்மனி

Germany's striker Miroslav Klose celebrates after scoring the team's fourth goal against Argentina during the 2010 World Cup quarterfinal football match at Green Point stadium in Cape Town, South Africa, on July 3, 2010.
லீக் சுற்று:
* ஆஸ்திரேலியாவை வென்றது (4-0)
* செர்பியாவுடன் தோல்வி (0-1)
* கானாவை வென்றது (1-0)
"ரவுண்டு-16' சுற்று:
* இங்கிலாந்தை வீழ்த்தியது (4-1)
காலிறுதி:
* அர்ஜென்டினாவை வென்றது (4-0)
அரையிறுதி:
* ஸ்பெயினிடம் தோல்வி (0-1)
உருகுவே


Pereira: We are gunning for third


லீக் சுற்று:

* பிரான்சுடன் "டிரா' (0-0)
* தென் ஆப்ரிக்காவுடன் வெற்றி (3-0)
* மெக்சிகோவை வென்றது (1-0)
"ரவுண்டு-16' சுற்று:
* தென் கொரியாவை வீழ்த்தியது (2-1)
காலிறுதி:
* கானாவை வென்றது (5-3)
அரையிறுதி:
* நெதர்லாந்திடம் தோல்வி (2-3)

இரு அணிகளும் இதுவரை...


ஜெர்மனி, உருகுவே அணிகள் இதுவரை 8 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஜெர்மனி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உருகுவே ஒரு வெற்றி கூட பெற்றதில்லை. 2 போட்டிகள் "டிராவில்' முடிந்துள்ளன. உலககோப்பை அரங்கில் இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஜெர்மனி 2 வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது.
 
கோல்டன் ஷூ யாருக்கு


உலககோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடிக்கும் வீரர்களுக்கு "கோல்டன் ஷூ' வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரில் இதைக் கைப்பற்ற ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர் இடையே கடும் போட்டி நடக்கிறது. இருவரும் தலா 5 கோல்கள் அடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து தலா 4 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் ஜெர்மனியின் குளோஸ், தாமஸ் முல்லர், உருகுவேயின் போர்லான் ஆகியோர் உள்ளனர். இத்தொடரில் இதுவரை அதிக கோல் அடித்த வீரர்கள்:



வீரர்    அணி    கோல்
வில்லா ஸ்பெயின்    5
ஸ்னைடர்    நெதர்லாந்து    5
தாமஸ் முல்லர்    ஜெர்மனி    4
குளோஸ்    ஜெர்மனி    4
போர்லான்    உருகுவே    4


"டாப்-3' ல் இடம் பிடிப்போம்: ஆஸ்கர் டபரேஸ்


உலககோப்பை பைனல் வாய்ப்பை இழந்தாலும், டாப்-3 அணிகளுக்குள் இடம் பெற கடுமையாக முயற்சிப்போம் என்றார் உருகுவே அணியின் பயிற்சியாளர் ஆஸ்கர் டபரேஸ். இது குறித்து அவர் கூறியது: இன்றைய மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஜெர்மனி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. இதனை சமாளித்து பதிலடி கொடுப்போம். இன்று கட்டாயம் வெற்றியை எட்டுவோம் என்று உறுதி அளிக்க வில்லை. இருப்பினும் சாகும் வரை போராடுவோம். போர்லான், சோரஸ் உள்ளிட்ட முன்கள வீரர்கள், வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஜெர்மனியின் தடுப்புகளை மீறி, வீரர்கள் கோல் மழை பொழிய வேண்டும். 



40 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதி வரை முன்னேறியுள்ளதை பெருமையாக கருதுகிறோம். இதன் மூலம் கடந்த காலங்களில் இழந்த நம்பிக்கையை மீட்டுள்ளோம். நாளை நடக்க உள்ள பைனல் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அதிரடி மற்றும் தடுப்பாட்டம் ஆடுவதில் ஸ்பெயின் அசத்தி வருகிறது. பந்தை தங்கள் வசம் வைத்துக் கொள்வதில், ஸ்பெயின் வீரர்கள் கைதேர்ந்துள்ளனர். இவ்வாறு ஆஸ்கர் கூறினார்.




Post Comment


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்
    Tamil Top Blogs
    LUXMI PHOTO & VIDEO
    Tamil 10 top sites [www.tamil10 .com ]

    NeoCounter

    என்னை பற்றி ...

    My Photo
    என்னை பற்றி ?? Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.