வெட்டுக்கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி.
ஆயினும் இரண்டும் விலங்குளே. இரண்டும் சப்தம் எழுப்பி பேசிக்கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்குகளுக்குள் தவகல் பரிவர்த்தனை சப்தம் மூலமாகத் தான் நடைபெறுகிறது.
ஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஆக்லஹாமா பல்கலைக் கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சப்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காக பார்க்கும்போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும்போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்றுபோலவே இருந்ததைக் கண்டு வியந்தனர்.
அடிப்படையாக எல்லா விலங்கு பாஷைகளுக்குள்ளும் ஒருவித சப்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமாக ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.
0 comments:
Post a Comment