சுழல் மன்னன் முரளிய கடைசியாக கிரவுன்டுல காண்கின்ற படியா…..
முரளிதரன் இன்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இன்று நடந்த ஆட்டம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்குமென்ரே நினைக்கிறன்.
முரளியின் கடந்த காலங்கள் மற்றும் அவரின் சாதனைகள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறன்.
சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர்.
முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார்.
1990 மற்றும் 1991ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்
இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில்விளையாடினார்.
முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
- தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).
- தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60)
- ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
- தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
- வேகமான 350, 400, 450, 500, 550, 600, 650 மற்றும் 700 தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
- நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.
- தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153)
- அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(75)
1st | Craig McDermott lbw 9 vs Australia - Match #1 - Test #1195 |
50th | Navjot Sidhu caught Ruwan Kalpage 43 vs India - Match #13 - Test #1247 |
100th | Stephen Fleming bowled 59 vs New Zealand - Match #27 - 1359 |
150th | Guy Whittall caught sub (Mahela Jayawardene) 17 vs Zimbabwe - Match #36 - Test #1395 |
200th | Dominic Cork caught Romesh Kaluwitharana 8 vs England - Match #42 - Test #1423 |
250th | Naved Ashraf lbw 27 vs Pakistan - Match #51 - Test #1489 |
300th | Shaun Pollock caught Tillakaratne Dilshan 11 vs SouthAfrica - Match #58 - Test #1526 |
350th | Mohammad Sharif caught and bowled 19 vs Bangladesh - Match #66 - Test #1561 |
400th | Henry Olonga bowled 0 vs Zimbabwe - Match #72 - Test #1585 |
450th | Daryl Tuffey caught Sanath Jayasuriya 1 vs NewZealand - Match #80 - Test #1644 |
500th | Michael Kasprowicz bowled 0 vs Australia - Match #87 - Test #1688 |
520th | Mluleki Nkala caught Mahela Jayawardena 24 vs Zimbabwe - Match #89 - Test #1698 - Breaks CourtneyWalsh's world record |
550th | Khaled Mashud caught Thilan Samaraweera 2 vs Bangladesh - Match #94 - Test #1764 |
600th | Khaled Mashud caught Lasith Malinga 6 vs Bangladesh - Match #101 - Test #1786 |
650th | Makhaya Ntini caught Farveez Maharoof 13 vs South Africa - Match #108 - Test #1812 |
700th | Syed Rasel caught Farveez Maharoof 4 vs Bangladesh - Match #113 - Test #1839 |
709th | Paul Collingwood bowled 45 vs England - Match #116 - Test #1851 - Breaks Shane Warne's world record |
750th | Sourav Ganguly - vs India, July 2008 800th PP Ojha - vs India,July 2010 அதிக விக்கெட் எடுத்தவர்கள் அணிகளுடனான 800 விக்கெட் பகிர்வு 112 v England (in 16 Tests) 105 v India (in 22) 104 v South Africa (in 15) 89 v Bangladesh (in 11) 87 v Zimbabwe (in 14) 82 v New Zealand (in 14) 82 v West Indies (in 12) 80 v Pakistan (in 16) 59 v Australia (in 13) You are a legend... A Living legend... |
1 comments:
nice to see the whole history of murali
Post a Comment